"வேலியே" பயிரை மேய்ந்து.. A.C. கோச்சில் பயங்கரம்.. அலறகூட முடியாமல் மயங்கி விழுந்த பெண்.. ஆபீசர் கைது
ஏசி பெட்டியில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்
கான்பூர்: ஏ.சி பெட்டியில், இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த ரயில்வே டிக்கெட் பரிசோதகர் கைதுசெய்யப்பட்டார்... அவரது நண்பரை போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.
உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து டெல்லி செல்லும் சத்பாவனா எக்ஸ்பிரஸ் ரயிலில் 27 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் ரயில்வே ஊழியர் ஒருவர்..
இதையடுத்து, அந்த ஊழியர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்... ஆனால், அடுத்த சில நாட்களிலேயே, இன்னொரு ரயிலில், இன்னொரு பாலியல் குற்றச்சம்பவம், அதே உத்தரபிரதேசத்தில் நடைபெற்று அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது.

செக்கிங் ஆபீசர்
சம்பல் ரயில்வே ஸ்டேஷனுக்கு 30 வயது பெண், தன்னுடைய 2 வயது மகனுடன் சென்றுள்ளார்.. இரவு நேரம் வரும் ரயிலில் பயணிக்க பிளாட்பாரத்திலேயே ரயிலுக்காக காத்திருந்தார்.. ஆனால், டிக்கெட் ரிசர்வேஷன் செய்யப்படவில்லை.. அதனால், பொதுப்பெட்டியில் பயணிப்பதற்காக டிக்கெட் வாங்கியிருந்தார்.. அந்த நேரம் பார்த்து, அந்த பெண்ணுக்கு தெரிந்த ராஜு சிங் என்ற டிக்கெட் பரிசோதகர் அங்கு வந்தார்... அவர் அந்தப் பெண்ணிடம், "ஏன் தனியாக பொதுப்பெட்டியில் ஏற வேண்டும்? அதில் உட்கார கூட இடம் கிடைக்காது... அதனால், என்னுடன் வா, ஏசி பெட்டியில் இடம் ஏற்பாடு செய்து தருகிறேன்" என்று சொன்னார்.

AC கோச்
அந்த டிக்கெட் செக்கிங் ஆபீசரை, பெண்ணுக்கு 4 வருடமாக தெரியுமாம்.. அதனால், அவர் அழைத்ததும், ஏசி பெட்டிக்கு அவருடனேயே சென்றார். டேராடூன்-பிரயாக்ராஜ் லிங்க் எக்ஸ்பிரஸ் ரயிலில் இவர்கள் பயணம் செய்தனர்.. கொஞ்ச நேரத்தில், அதாவது இரவு 10 மணி போல, அந்த ஆபீசரும், அவரது நண்பரும், அந்த பெண் அமர்ந்திருக்கும் இடத்துக்கு வந்தனர்.. தங்களிடமிருந்த தண்ணீரை தந்து குடிக்க சொன்னார்கள்.. அந்த தண்ணீரில் மயக்க மருந்து கலக்கப்பட்டிருந்த நிலையில் அது தெரியாத அந்த பெண், தண்ணீரை வாங்கி குடித்தார்.

பொடி தண்ணீர்
ஆனால், குடித்த அடுத்த சில நிமிடங்களில் அப்பெண்ணுக்கு லேசான மயக்கம் வந்துவிட்டது.. உடனே, அந்த பெண்ணுடன் தூங்கி கொண்டிருந்த 2 வயது குழந்தையை, பக்கத்து படுக்கைக்கு மாற்றிவிட்டு, 2 பேரும் சேர்ந்து அந்த பெண்ணைக் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள்.. அந்தப்பெண் அரை மயக்கத்தில் கத்த முயன்றார்.. ஆனால், அவரால் முடியவில்லை... 2 பேருமே வன்கொடுமை செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர்... மறுநாள் காலையில், தான் செல்லவேண்டிய இடத்துக்கு அந்த பெண் சென்றார்.. ஸ்டேஷனில் நடந்த சம்பவம் பற்றி யாரிடமும் சொல்லவில்லை..

ஹெல்ப்லைன்
சொந்த ஊருக்கு வந்து, தன்னுடைய கணவரிடம் எல்லா சம்பவத்தையும் சொல்லி அழுதார்.. இதனால், அந்த கணவர், ரயில்வே ஹெல்ப்லைன் மூலம் புகார் பதிவு செய்தார்.. அதைதவிர. ரயில்வே டிக்கெட் பரிசோதகருக்கு எதிராக எழுத்து மூலமும் புகார் செய்தனர்.
இதையடுத்து, ரயில்வே போலீஸ் எஸ்பி அபர்ணா குப்தா, இந்த வழக்கை கையில் எடுத்தார்.. உடனடியாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றார்.. தான் மயக்க நிலையில் இருந்ததால், தன்னால் சத்தம் போட்டு யாரையும் உதவிக்கு அழைக்க முடியவில்லை என்று அபர்ணா குப்தாவிடம் வாக்குமூலம் தந்துள்ளார்.

வாக்குமூலம்
இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இது குறித்து ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தந்தார் அபர்ணா.. இறுதியில், ரயில்வே போலீஸார், ராஜுசிங் வீட்டில் ரெய்டு நடத்தி, அவரை அதிரடியாக கைதுசெய்தனர்.. அத்துடன் அவர் பணியிலிருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆபீசருடன் சேர்ந்து, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த அந்த நபர் யார் என்பது அடையாளம் காணப்படவில்லை.. அவரையும் தேடும் பணி ஆரம்பமாகி உள்ளது.. ரயில்வே டிக்கெட் பரிசோதகரே, ரயிலில் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்தது அனைவருக்கும் அதிர்ச்சியை தந்து வருகிறது..!
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications