"பியூட்டிஷியன்" அசரலையே.. 4வது மாடியில் இருந்து பெண்ணை தள்ளிவிட்டு.. இளைஞரை தூக்கிய போலீஸ்
காதலியை மதம் மாற சொல்லி கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்
கான்பூர்: காதலியை 4வது மாடியில் இருந்து, ஆவேசமாக தள்ளிவிட்டு கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.. என்ன காரணம்?
சமீபகாலமாகவே வடமாநிலங்களில் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை தாக்குதல்கள் பெருகி வருகிறது.
இதை எதிர்க்கட்சிகள் பலமுறை விமர்சித்தும்கூட, வன்முறை சம்பவங்கள் உத்தரபிரதேசம், உட்பட பல்வேறு மாநிலங்களில் குறையவில்லை.

பிரச்சாரங்கள்
இதனால் வரும் அதிருப்திகள், தேர்தல் சமயங்களில் எதிரொலிக்கின்றன.. பிரச்சாரங்களிலும், ஆளும்கட்சியை மீது குற்றச்சாட்டுகளை வைத்து விமர்சித்தாலும், குற்றங்களின் அளவு குறைவதில்லை.. பல குடும்பத்தில் பெண்கள் வரதட்சணை உள்ளிட்ட கொடுமைகளுக்கும் ஆளாகிறார்கள்.. ஏன், சில சமயங்களில் கொலை செய்வது போன்ற சம்பவங்களும் நடந்து வருகின்றன..

கறார் தன்மை
இப்போதும் அதுபோலவே ஒரு சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.. லக்னோவில் வசித்து வந்தவர் நிதி... இவர் சூபியான் என்று முஸ்லிம் நபரை காதலித்தார்.. 2 பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருக்கிறார்கள். .. ஆனால் திருமணம் செய்து கொள்வதென்றால் தன்னுடைய இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும் என்று காதலியிடம் கூறியுள்ளார் இருக்கிறார் சூபியான். இதற்கு அந்த பெண் ஒப்புக் கொள்ளவில்லை.. மறுப்பு சொல்லி உள்ளார்.. கட்டாயம் மதம் மாறியே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வந்துள்ளார் சூபியான்.

ஃபோர்த் ஃபுளோர்
கடந்த 15 நாட்களாகவே, காதலியின் வீட்டிற்கு சென்று, உடனே இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும் என்று நிர்ப்பந்தித்து வந்திருக்கிறார் சூபியான்.. சம்பவத்தன்றும் காதலி வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார்.. அப்போதும் அந்த பெண் மறுக்கவும், இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்துள்ளது.. உச்சக்கட்ட ஆத்திரம் அடைந்த சூபியான், திடீரென்று காதலியை 4வது மாடியில் இருந்து பிடித்து தள்ளி விட்டார்.. இதில் கீழே விழுந்த அந்த பெண், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்..

பியூட்டிஷியன்
இந்த சம்பவம் குறித்து, பெண்ணின் அம்மா போலீசில் தந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சூபியான் மீது கொலை முயற்சி, கட்டாய மதமாற்றம் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.. உயிரிழந்த நிதி குப்தாவுக்கு 19 வயதாகிறது.. பியூட்டிஷியன், அதாவது அழகுக்கலை நிபுணராக பயிற்சி எடுத்து வந்தார்... அதே பகுதியில்தான் சூபியான் வசித்து வந்தால், நிதியை தன் காதல் வலையில் வீழ்த்தி உள்ளார்.. இவர்கள் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவந்ததும், இருவரையுமே கண்டித்துள்ளனர்.. இரு வீட்டிலுமே சச்சரவுகளும் நடந்துள்ளன..

ஸ்டிராங் முடிவு
அதனால் மேலும் பிரச்சனை வரக்கூடாது என்று, சூபியானுடன் பேசுவதை நிதி குப்தா தவிர்த்து வந்திருக்கிறார்... இதனால், ஆத்திரமடைந்த சுபியான், இருவரும் நெருக்கமாக இருந்தபோது எடுத்துக் கொண்ட போட்டோ தன்னிடம் இருப்பதாகவும், மதம் மாறி தன்னை கல்யாணம் செய்து கொள்ளாவிட்டால், அந்த போட்டோவை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டி வந்துள்ளார்.. அப்போதுகூட மதம் மாற முடியாது என்று நிதி குப்தா உறுதியாக நின்றிருக்கிறார்.. இந்த உறுதிதான் சூபியானை, கொலை வரை கொண்டுசென்றுவிட்டதாக சொல்கிறார்கள்.
-
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார்












Click it and Unblock the Notifications