"டெல்லி பாணி.." கரும்பு காட்டில் குலை நடுங்கும் சம்பவம்.. 6 துண்டுகளாக வெட்டி கொலை!
கரும்பு தோட்டத்தில் காதலியை 6 துண்டுகளாக வெட்டிய நபர் கைதானார்
கான்பூர்: கரும்பு தோட்டத்திலேயே, அந்த பெண்ணை கடத்தி சென்று இப்படி ஒரு பயங்கரத்தை 2 இளைஞர்கள் சேர்ந்து செய்துள்ளனர்..!!
உத்தரபிரதேசத்தில் இன்னொரு பகீர் சம்பவம் நடந்துள்ளது.. அந்த இளைஞர் பெயர் பிரின்ஸ் யாதவ்.. அசம்கர் மாவட்டத்தில் உள்ள இஷாக்பூரில் வசித்து வந்த ஆராதனா என்ற பெண்ணை இவர் காதலித்து வந்துள்ளார்...
ஆனால், அந்த பெண், வேறொருவரை கல்யாணம் செய்து கொண்டு போய்விட்டார். இதனால், ஆராதனா மீது கடுப்பிலும் ஆத்திரத்திலும் பிரின்ஸ் இருந்து வந்துள்ளார்..

திருமணம்
அதேசமயம், திருமணமானாலும் பிரின்ஸூடன் உறவில் ஆராதனா இருந்ததாக சொல்கிறார்கள்.. எனினும், ஆராதனாவுக்கு திருமணம் ஆனதை பிரின்ஸால் ஜீரணிக்கவே முடியவில்லை.. அதனால், கொன்றுவிடுவது என்று முடிவு செய்தார்.. இதற்காக, தன்னுடைய பெற்றோர், சொந்தக்காரர் சர்வேஷ் உட்பட மற்ற குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் ஆராதனாவை கொலை செய்ய பிளான் செய்துள்ளார்.. அதற்காக எல்லாரும் சேர்ந்து ஒரு தேதியையும் குறித்தனர்.

தோட்டத்துக்குள்ளேயே
கடந்த நவம்பர் 9ம் தேதி, ஆராதனாவை பிரின்ஸ் தன்னுடைய பைக்கில் கோயிலுக்கு அழைத்து சென்றுள்ளார்.. பிறகு அங்கிருந்து சர்வேஷின் உதவியுடன் கரும்பு தோட்டத்திற்கு ஆராதனாவை அழைத்து சென்று, கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர்.. பிறகு 2 பேரும் சேர்ந்து, ஆராதனாவின் உடலை கரும்பு தோட்டத்திலேயே வைத்து வெட்டி உள்ளனர்.. மொத்தம் 6 துண்டுகளாக வெட்டி, பாலித்தீன் பைகளில் அடைத்து, அவைகளை தோட்டத்தில் இருந்த கிணற்றிலும் வீசிவிட்டனர்.

நிர்வாண கோலம்
தலையை மட்டும் தனியாக வெட்டி எடுத்துக் கொண்டு, சற்று தூரத்தில் இருந்த குளத்தில் வீசிவிட்டு சென்றுவிட்டனர்.. நவம்பர் 15ம் தேதி, உள்ளூர்வாசிகள் சிலர் பஸ்சிமி கிராமத்திற்கு வெளியே அமைந்துள்ள அந்த கிணற்றில், நிர்வாண கோலத்தில் சடலம் மிதப்பதை கண்டுபிடித்தனர்.. அதற்கு பிறகுதான் இந்த விஷயம் போலீசுக்கு சென்று, அவர்கள் விரைந்து வந்து சடலத்தை மீட்டு, யார் என்ன என்று விசாரித்துள்ளனர்..

கரும்பு தோட்டத்தில்
ஆனால், அந்த பெண்ணை கொலை செய்யப்பட்டு, 3 நாட்களுக்கு மேலாகியிருக்கலாம் என்று சந்தேகப்பட்டனர்.. விசாரித்தபோதுதான், இப்படிப்பட்ட பயங்கரம் வெளியே தெரிந்தது. இதையடுத்து, பிரின்ஸை போலீசார் கைது செய்தனர்.. அப்போது, திடீரென பிரின்ஸ், மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால், போலீசாரை நோக்கி சுட்டுவிட்டார்.. இதனால், போலீசாரும், பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர்... அதில், பிரின்ஸ் யாதவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது...இதற்கு பிறகு, அவரை மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை தந்தனர்.. அதற்கு பிறகு, அவரிடம் இருந்து கத்திகள், நாட்டு கைத்துப்பாக்கி, தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்..

தலை துண்டிப்பு
வெட்டப்பட்ட ஆராதனாவின் உடல் பாகங்களை எங்கெங்கு வீசினார்கள் என்பதை கண்டுபிடித்து, எடுப்பதற்காக பிரின்ஸை அழைத்து கொண்டு போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்றனர்.. அதன்படியே, ஆராதனாவின் தலையை கண்டெடுத்தனர். பிரின்சுக்கு உதவிய சர்வேஷ், பிரமிளா யாதவ், சுமன், ராஜாராம், கலாவதி, மஞ்சு, ஷீலா இப்படி எல்லாருமே எஸ்கேப் ஆகிவிட்டனர்.. அவர்கள் எங்கே தலைமறைவாக உள்ளனர் என்பது தெரியதாததால், போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.. ஏற்கனவே, டெல்லி சம்பவத்தில் நடுநடுங்கி போயுள்ள மக்கள், இந்த கொலையை கேள்விப்பட்டதும், அப்படியே உறைந்து போய் உள்ளனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications