காங். நாடாளுமன்ற குழுத் தலைவராக சோனியா மீண்டும் தேர்வு!
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த லோக்சபாவில் 206 உறுப்பினர்களுடன் செயல்பட்ட காங்கிரஸ் கட்சிக்கு தற்போது 44 எம்பிக்கள் மட்டுமே உள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட எதிர்கட்சி என்ற அந்தஸ்த்தினை பெற குறைந்தபட்சம் 54 எம்பிக்கள் தேவை.

இந்த நிலையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியாவின் பெயரை மல்லிகார்ஜூன கார்கே முன்மொழிந்தார்.
அதைத் தொடர்ந்து கித்வாய் உள்ளிட்ட தலைவர்கள் வழிமொழிந்தனர். பின்னர் சோனியா ஒருமனதாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போது பேசிய சோனியா, மக்கள் நலனுக்காக புதிய அரசுடன் காங்கிரஸ் இணைந்து செயல்படும். அரசுடன் இணைந்து செயல்பட்டாலும் மக்கள் பிரச்சனைகளை எழுப்புவோம். காங்கிரஸ் கட்சி ஒரு வலுவான எதிர்க்கட்சியாக செயல்படும் என்றார்.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications