For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோழிக்கோடு ஏர்போர்ட்டில் துப்பாக்கியை காட்டி மிரட்டினர் சிஐஎஸ்எப் வீரர்கள்: ஏஏஐ அறிக்கை

By Siva
Google Oneindia Tamil News

கோழிக்கோடு: கோழிக்கோடு விமான நிலையத்தில் மத்திய தொழில்பாதுகாப்புபடையினர் உயர் அதிகாரிகள் உள்ளிடோரை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக இந்திய விமான நிலையங்கள் ஆணையம் சமர்பித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள விமான நிலையத்தில் புதன்கிழமை இரவு மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள்(சிஐஎஸ்எப்) மற்றும் விமான நிலைய பணியாளர்களுக்கு இடையே நடந்த மோதலில் சிஎஸ்ஐஎப் வீரர் ஒருவர் பலியானார். இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

CSIF personnel went on armed rampage in Kozhikode airport: AAI report

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து இந்திய விமான நிலையங்கள் ஆணையம் சமர்பித்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கோழிக்கோடு விமான நிலையத்தில் சிஎஸ்ஐஎப் வீரர்கள் உயர் அதிகாரிகள் உள்பட பலரை துப்பாக்கிகளை காட்டி மிரட்டியுள்ளனர். அவர்கள் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு டவர் மற்றும் ரன்வேயில் துப்பாக்கிகளை காட்டி மிரட்டியுள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த சிஎஸ்ஐஎப் வீரர்கள் குழு அங்கு ஒருவரையொருவர் அடித்ததுடன், அதிகாரிகள், ஊழியர்களை நோக்கி துப்பாக்கியை நீட்டியுள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
According to the report submitted by the Airport Authority of India, CISF personnel threatened senior officials and staff with guns when clash broke out in Kozhikode airport leaving one jawan dead.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X