தலித் மாணவரை காலால் உதைத்த ஆசிரியர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு
மாணவரை பிரம்பால் அடித்து, காலால் எட்டி உதைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிதம்பரம் அரசு நந்தனார் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர் குமரனை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆசிரியர் அடித்து, உதைப்பதாகக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
என்ன நடந்தது?
சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நேற்று பள்ளி வளாகத்தில் ஆய்வுக்கு சென்றுள்ளார். அப்போது குமரன் உட்பட சில மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து பள்ளி வளாகத்தில் இருப்பதைக் கண்ட தலைமை ஆசிரியர் மாணவர்கள் அனைவரையும் அவர்கள் வகுப்பு ஆசிரியரிடம் அழைத்துவந்து விட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த வகுப்பு ஆசிரியர் மாணவர்களை கண்டித்து அடித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அதில் குமரன் என்ற மாணவரை அடித்து காலால் உதைக்கும் போது அதை வகுப்பிலிருந்த சக மாணவர்களில் ஒருவர் அலைபேசியில் பதிவு செய்துள்ளார். இந்த காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ஆசிரியர் தாக்கியதால் காயமடைந்ததாக கூறி குமரனை சக மாணவர்கள் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தலித் சமூகத்தை சேர்ந்தவர்
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இதுபற்றி தகவலறிந்த கடலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை துணை ஆட்சியர் செல்வபாண்டி, சிதம்பரம் ஆதிதிராவிட நலத்துறை தாசில்தார் சத்யன் ஆகியோர் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். பள்ளி வகுப்புக்கு வராத மாணவர்கள் சிலரை இயற்பியல் ஆசிரியர் சுப்பிரமணியன் தாக்கியதும், அதில் ஒரு மாணவரை பிரம்பாலும், காலாலும் தாக்கும்போது சக மாணவர் ஒருவர் காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
- அருணாசலப்பிரதேசத்தை சீனா ஏன் 'தெற்கு திபெத்' என்று சொல்கிறது?
- அ.தி.மு.கவை முந்திய காங்கிரஸ், வி.சி.க - கைவிட்ட கிராமப்புற வாக்குகள்
இதுபற்றி தகவலறிந்த சிதம்பரம் நகர காவல் துறையினர் அரசு மருத்துவமனைக்கு சென்று மாணவனிடம் விசாரணை நடத்தினர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவனிடம் அதிகாரிகள் குழுவினரும் நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து மாணவர் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மாணவனை வகுப்பறையில் தாக்கிய இயற்பியல் ஆசிரியர் சுப்பிரமணியன் மீது சிறார் வதை சட்டம், பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினத்தவர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சிதம்பரம் நகர போலீசார் ஆசிரியர் சுப்பிரமணியனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் ஆசிரியரை சிதம்பரம் இரண்டாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் முன்னிறுத்தினர். நடுவர் உத்தரவை அடுத்து அவர் சிதம்பரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து சிதம்பரம் நகர காவல் துணை கண்காணிப்பாளர் ரமேஷ்ராஜை பிபிசி தொடர்பு கொண்டு பேசியது. அப்போது பேசிய அவர், "இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளோம். தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்ட ஆசிரியரிடம், நீதிமன்ற அனுமதி பெற்று உரிய விசாரணை மேற்கொள்ளப்படும். மேலும் பாதிக்கப்பட்ட மாணவர் தற்போது நலமுடன் உள்ளார்," என்றார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பிற செய்திகள்:
- ஒருபாலுறவு முதல் முஸ்லிம் வரை: விதிகளை உடைத்த 5 சூப்பர் ஹீரோக்கள்
- தமிழ்நாட்டில் வழிபாட்டுத் தலங்களை முழுமையாகத் திறக்க அரசு அனுமதி
- அ.தி.மு.கவை முந்திய காங்கிரஸ், வி.சி.க - கைவிட்ட கிராமப்புற வாக்குகள்
- இந்து - முஸ்லிம் பிரச்னை, விவசாயிகள் மரணம்: உ.பி தேர்தலில் எதிரொலிப்பது எது?
- கோவிட் தொற்று சந்தேகத்தால் கொல்லப்பட்ட நாய்கள்: எஜமானர் கண்ணீர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?














Click it and Unblock the Notifications