ஜல்லிக்கட்டு புரட்சியாளர்களுக்கு எதிராக கியூப்பா வழக்கு! நீதிபதிகளை அவதூறாக பேசியதாக மனு தாக்கல்!!
ஜல்லிக்கட்டு புரட்சியாளர்களுக்கு எதிராக கியூப்பா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் உச்சநீதிமன்ற நீதிபதிகளை புரட்சியாளர்கள் விமர்சித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதிக்க மறுத்ததையடுத்து கியூப்பா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் ஜல்லிக்கட்டுப் புரட்சியாளர்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகளை விமர்சித்ததாக தெரிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்கக்கோரி கியூப்பா அமைப்பு தொடர்ந்த வழக்கு கடந்த 31ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜல்லிக்கட்டு தொடர்பான தமிழக அரசின் சட்டத்துக்கு தடைவிதிக்குமாறு அந்த அமைப்பு கோரிக்கை விடுத்தது.

இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் தமிழக அரசின் சட்டத்துக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. இதைத்தொடர்ந்து தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டம் குடியரசு தலைவர் ஒப்புதலுடன் நேற்று அரசிதழில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு புரட்சியாளர்களுக்கு எதிராக கியூப்பா அமைப்பு இன்று மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் ஜல்லிக்கட்டுப் புரட்சியாளர்கள் நீதிபதிகளை அவதூறாக பேசியதாக தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பானுமதியை விமர்சித்ததாக கியூப்பா அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. ஜல்லிக்கட்டு சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டு இனி தடை ஏதும் விதிக்கப்பட முடியாது என்ற நிலையில் கியூப்பா அமைப்பு ஜல்லிக்கட்டு புரட்சியாளர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications