சாம்சங் போன் ஆர்டர் செய்தவருக்கு நிர்மா சோப்பு: ப்ளிப்கார்ட் மீது மோசடி வழக்கு
மும்பை: சாம்சங் கேலக்ஸி நோட் 4 செல்போன் ஆர்டர் செய்தவருக்கு நிர்மா சோப்பை அனுப்பி வைத்த ப்ளிப்கார்ட் நிறுவனம் மீது மும்பை மலபார் ஹில் பகுதி போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மும்பையின் தெற்கு பகுதியில் உள்ள வால்கேஸ்வரை சேர்ந்தவர் ஆனந்த் பாலாகியா. முன்னணி ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவர் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ப்ளிப்கார்ட்டில் சாம்சங் கேலக்ஸி நோட் 4 செல்போனுக்கு கடந்த மாதம் 25ம் தேதி ஆர்டர் கொடுத்துள்ளார்.
கடந்த 30ம் தேதி அவருக்கு ப்ளிப்கார்ட் நிறுவனத்தில் இருந்து வந்த பார்சலை பிரித்துப் பார்த்தால் அதில் போனுக்கு பதில் நிர்மா சோப்பு இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அவர் கூறுகையில்,
செல்போனை டெலிவரி கொடுக்க வந்த நபரிடம் ரூ. 29 ஆயிரத்து 900 கொடுத்தேன். பணத்தை வாங்கிவிட்டு அவர் சென்ற பிறகு அட்டைப்பெட்டியை பிரித்துப் பார்த்தபோது அதில் ஒரு சோப்பும், ஆன்டிராய்ட் போன் சார்ஜரும் இருந்தது.
உடனே அந்த டெலிவரி பையனை போனில் அழைத்தபோது அவரோ இது குறித்து கஸ்டமர் கேர் எண்ணுக்கு போன் செய்யுங்கள் என்றார். கஸ்டமர் கேருக்கு போன் செய்தால் இந்த புகார் உண்மை இல்லை என்றார்கள்.
அதன் பிறகே மலபார் ஹில் பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். எனது புகாரின்பேரில் போலீசார் ப்ளிப்கார்ட் நிறுவனம் மீது மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர். செல்போனுக்கு பதில் நிர்மா சோப்பு அளித்த ப்ளிப்கார்ட்டை நினைத்தால் எரிச்சலாக உள்ளது என்றார்.
இந்நிலையில் இது குறித்து ப்ளிப்கார்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியருப்பதாவது,
வாடிக்கையாளர்களை எங்கள் நிறுவனம் ஒருபோதும் மோசடி செய்யாது. இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அந்த வாடிக்கையாளருக்கு பணம் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications