'ஓகி' புயலால் இவ்வளவு சேதங்கள் ஏற்படலாம்.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அறிவிப்பு #Ockhi
டெல்லி: 'ஓகி' புயலால் தென் தமிழகத்தில் சேதங்கள் ஏற்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கன்னியாகுமரியையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தம், புயல் சின்னமாக உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்திருந்தது.
அதேபோல காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயல் சின்னமாக உருவாகிவருகிறது. அதற்கு 'ஓகி' என்று பெயரிடப்பட்டுள்ளது.

தெற்கே கன மழை
இந்த புயலானது மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து செல்லும். இதன் தாக்கத்தால் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.

சேதம் எச்சரிக்கை
இந்த நிலையில், சேதங்கள் குறித்த எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் வீடுகள், பயிர்களுக்கு காற்றால் சேதம் ஏற்படலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. கூரை வீடுகள் அதிகம் பாதிப்புள்ளாகும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

கேரள மாவட்டங்கள்
பத்தினம்திட்டா, ஆழப்புழா, கோட்டையம், இடுக்கி, கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய கேரளாவிலுள்ள மாவட்டங்களிலும் மழை மற்றும் காற்றால் பாதிப்பு நேரிடலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மின்சார இணைப்பு
தமிழகம் மற்றும் கேரள தென் மாவட்டங்களில் ஓகி புயல் காரணமாக மின்சார துண்டிப்பு, செல்போன் இணைப்பு துண்டிப்பு ஆகியவை ஏற்படும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் தென் மாவட்ட மீனவர்களும், 48 மணி நேரத்திற்கு கேரள தென் மாவட்ட மீனவர்களும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications