நாங்கள் இருக்கிறோம்: தமிழகத்திற்கு உதவ முன்வந்த ஆந்திரா, கேரளா முதல்வர்கள்
ஹைதராபாத்: வர்தா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயாராக உள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், கேரள முதல்வர் பினரயி விஜயனும் தெரிவித்துள்ளனர்.
வங்கக் கடலில் உருவான வர்தா புயல் சென்னை அருகே நேற்று கரையை கடந்தது. புயல் கரையை கடந்தபோது சென்னையில் பலத்த மழை பெய்ததுடன், பேய்க்காற்று வீசியது.

வர்தா புயல் சென்னையை நாசமாக்கிவிட்டு சென்றுள்ளது. இந்நிலையில் வர்யா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், கேரள முதல்வர் பினரயி விஜயனும் தெரிவித்துள்ளனர்.
வர்தா புயலுக்கு தமிழகத்தில் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்யுமாறு தமிழக பாஜகவினருக்கு அக்கட்சியின் தலைவர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.
புயல் கரையை கடந்து சென்ற பிறகும் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இன்றும் மழை பெய்து வருகிறது.












Click it and Unblock the Notifications