ஜெ.சொத்துக்குவிப்பு வழக்கு: நெருங்கும் கிளைமேக்ஸ்.. இன்னும் சில வாரங்களில் தீர்ப்பு!
பெங்களூரு: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதை அடுத்து தீர்ப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனிநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் அரசு தரப்பு வாதம் முடிந்து ஜெயலலிதா மற்றும் சசிகலா தரப்பு இறுதி வாதமும் நிறைவடைந்தது. இந்த நிலையில் சுதாகரன், இளவரசி ஆகியோர் சார்பில் வக்கீல் அமித் தேசாய் பெங்களூர் தனிக்கோர்ட்டில் ஆஜராக வாதிட்டு வந்தார்.

8 நாட்கள் வாதிட்ட அமீத் தேசாய்
இந்த நிலையில் பெங்களூர் தனிக்கோர்ட்டில் நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா முன்னிலையில் வக்கீல் அமித் தேசாய் கடைசி நாளாக நேற்று வாதிட்டார். அவர் மொத்தம் 8 நாட்கள் வாதிட்டு தனது தரப்பு வாதங்களை எடுத்து வைத்தார். இந்த வழக்கில் தனது இறுதி வாதத்தின்போது, இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துக்களின் பங்குதாரர்கள் மீது வழக்கு தொடரப்படாதது ஏன் என்ற கேள்வியை அவர் முன்வைத்தார்.

விடுவிக்கவேண்டும்
அரசியல் காழ்ப்புணர்வு காரணமாகவே இந்த வழக்கு போடப்பட்டதாகக் குறிப்பிட்ட ஹமீத் தேசாய், சுதாகரன், இளவரசி ஆகிய இருவரும் நிரபராதிகள் என்றும், அவர்களை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.இதையடுத்து அரசு தரப்பு மற்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ள 4 பேரின் இறுதி வாதமும் முடிவடைந்துவிட்டது.

எழுத்துப்பூர்வமாக
மேலும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தரப்பு வழக்கறிஞர்கள், தங்கள் வாதத்தை எழுத்துப்பூர்வமாக நாளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

42 நாட்கள்
குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் மொத்தம் 42 நாட்கள் இறுதி வாதம் நடைபெற்று உள்ளது.இதில் ஜெயலலிதா சார்பில் 25 நாட்களும், சசிகலா சார்பில் 9 நாட்களும், சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரது சார்பில் 8 நாட்களும் இறுதி வாதம் நடந்தது.

கூடுதல் வாய்ப்பு
இந்த வழக்கு தொடர்பாக மேலும் சில தகவல்களை எடுத்து வைத்து வாதிட தனக்கு கூடுதலாக இரண்டரை மணி நேரம் வாய்ப்பு வழங்குமாறு ஜெயலலிதா வக்கீல் நீதிபதியிடம் முறையிட்டார். அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இன்று (புதன்கிழமை) வாதிடுமாறு அவருக்கு உத்தரவிட்டார்.

அரசு தரப்பு வாதம்
அதைத்தொடர்ந்து அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் தனக்கு மேலும் 2 நாட்கள் ஒதுக்குமாறு கேட்டார். செப்டம்பர் 1மற்றும் 2ஆம் தேதிகளில் அவர் வாதிடுகிறார். அதைத்தொடர்ந்து இந்த வழக்கு மொத்த விசாரணையும் நிறைவடைகிறது.

தீர்ப்பு நாளை எதிர்நோக்கி
17 ஆண்டுகாலமாக நடைபெற்று வரும் சொத்துக்குவிப்பு வழக்கு கிளைமாக்ஸை நெருங்கிவிட்டது. செப்டம்பர் மாதத்தில் முதல்வாரத்திற்குள் தீர்ப்பு வெளியாகும் எதிர்பார்க்கப்படுவதால் திக்.. திக்.. மனநிலையில் உள்ளனர் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications