குளிரால் முடங்கிக் கிடக்கும் காஷ்மீர்- உறைந்து போன வரலாற்றுச் சிறப்பு மிக்க தால் ஏரி
ஸ்ரீநகர்: காஷ்மீரில் ஏற்பட்டுள்ள கடுமையான பனிப்பொழிவு காரணமாக வரலாற்று சிறப்பு மிக்க தால் ஏரி உறைந்து போய் காணப்படுகின்றது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சில நாட்களாக கடுமையான பனி பொழிந்து வருகின்றது. இன்னும் 40 நாட்களுக்கு பனி நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் ஸ்ரீநகரில் இன்று பெய்துவரும் பனியின் அளவு மைனஸ் 5.6 டிகிரியாக உள்ளது. லடாக் பகுதியில் மைனஸ் 15.1 டிகிரியாக நிலவுகின்றது.

இதனால், வரலாற்று சிறப்புமிக்க தால் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள தண்ணீர் உறைந்துப்போய் ஐஸ்கட்டிகளாக காட்சி அளிக்கின்றது. இன்னும் 72 மணிநேரத்துக்கு அதிகமான பனிப்பொழிவு நீடிக்கும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடும்குளிரில் வெளியே செல்ல முடியாமல் வீட்டினுள் மக்கள் முடங்கிக் கிடக்க நேரிட்டுள்ளது.
காஷ்மீரின் மிகப்பிரபலமான தால் ஏரியை சுற்றியுள்ள சாலைகளும் நேற்றும், இன்றும் வெறிச்சோடிக் காணப்பட்டன. காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் மைனஸ் 3.3 டிகிரி செல்சியஸாகவும், அமர்நாத் யாத்திரையின் பேஸ் கேம்ப் பகுதியில் மைனஸ் 7.9 டிகிரி செல்சியஸாகவும் குளிர் நிலை பதிவாகியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications