கோவிலுக்குள் பூசாரி மகளை பலாத்காரம் செய்த சிறுவன்- கட்டி வைத்து வெளுத்த இளைஞர்கள்
பூசாரி மகளை பலாத்காரம் செய்ததால் தலித் சிறுவனை நான்கு இளைஞர்கள் கட்டி வைத்து அடித்துள்ளனர். இளைஞர்களை கைது செய்த போலீசார், சிறுவனையும் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
ஜெய்ப்பூர்: ஒரு சிறுவனின் கை கால்களை கட்டிப்போட்டு நான்கு இளைஞர்கள் காட்டுமிராண்டித்தனமாக தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கோவிலுக்குள் நுழைய முயன்ற சிறுவன் தாக்கப்பட்டதாக அனைவரும் சமூக வலைத்தளங்களில் கண்டனக்குரல் எழுப்பினர். ஆனால் கோவிலுக்குள் சிறுமியை பலாத்காரம் செய்ததாக அந்த சிறுவனை தாக்கியுள்ளனர். நால்வரையும் கைது செய்த போலீசார், சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து உள்ளனர்.
வாட்ஸ்அப், ட்விட்டர், ஃபேஸ்புக் என சமூக வலைத்தளப்பங்கள் அனைத்திலும் சிறுவனை கட்டி வைத்து தாக்கும் வீடியோ வைரலானது. அவன் கதற கதற கனமான குச்சியால் அடி வெளுக்கிறது ஒரு கும்பல். இதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன.

ஆனால் அந்த சிறுவன் அடிவாங்கக் காரணம் அந்த சிறுவன் செய்த தகாத செயல்தான். பிஞ்சுலேயே பழுத்து வெம்பிப்போனதான் எதிரொலிதான் இப்படிப்பட்ட செயலை செய்யத் தூண்டியிருக்கிறது.
சனிக்கிழமையன்று கோவிலுக்கு போன சிறுவன் அங்கிருந்த சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டான். இதனையடுத்தே சிறுவனை கட்டி வைத்து அடி வெளுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்களும், கிராம மக்களும் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனை தாக்கிய நால்வரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
-
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
புழுதி புயலில் சிக்கிய ராஜஸ்தான்.. வீடுகளை மூடியதால் மூச்சுவிட முடியாமல் மக்கள் தவிப்பு.. வீடியோ பாருங்க -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications