டெல்லி: ரதத்தில் ஊர்வலம் வந்த தலித் மாப்பிள்ளைக்கு அடி-உதை: 2 வாலிபர்கள் கைது
டெல்லி: டெல்லியில், திருமண ஊர்வலத்தின்போது ரதத்தை பயன்படுத்தியதற்காக தலித் மாப்பிள்ளையைத் தாக்கிய இரண்டு வாலிபர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மக்கள் திருமண ஊர்வலத்தின்போது ரதத்தை பயன்படுத்த தெற்கு டெல்லியின் மெராலி அருகே சய்துல்லாஜாப் பகுதியில் உள்ள சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் வசித்து வரும் பொதுத் பணித்துறை ஊழியர் ஒருவரது மகளுக்கு திருமணம் நடைபெற்றது.
அப்போது திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளையை ரதத்தில் அமர வைத்து ஊர்வலமாக அழைத்து வந்துள்ளனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதியை சேர்ந்த ராமு, சோனு என்ற இரண்டு வாலிபர்கள், ரதத்தில் அமர்ந்திருந்த மாப்பிள்ளையை அடித்து, உதைத்துள்ளனர்.
தலித்துக்கள் எப்படி ரதத்தைப் பயன் படுத்தலாம் எனக் கேட்டு அவர்கள் மாப்பிள்ளையைத் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரச்சினைக்கு காரணமான இரு வாலிபர்களையும் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப் பட்ட அவர்கள் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனபோதும், தலித் மாப்பிள்ளைத் தாக்கப்பட்ட இந்த சம்பத்தை அடுத்து அங்கு சண்டை மூளும் அபாயம் ஏற்பட்டது. போலீசாரின் முயற்சியால் தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications