தீவிரமடைந்த தலித் போராட்டம்.. கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு காத்திருக்கிறதா அடி?
தாழ்த்தப்பட்டோருக்கான வன்கொடுமை சட்டத்தை திருத்தியதால் தலித்துகள் நடத்தும் போராட்டம் கர்நாடக சட்டசபை தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.
Recommended Video

டெல்லி: தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமை சட்டத்தை திருத்தியமைத்ததை கண்டித்து வடமாநிலங்களில் தலித்துகள் நடத்தி வரும் போராட்டத்தால் கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.
1989-இல் உருவாக்கப்பட்ட தாழ்த்தப்பட்டோருக்கான வன்கொடுமை தடுப்பு சட்டம் அமலில் இருந்து வந்தது. இந்நிலையில் அந்த சட்டத்தை நீர்த்து போக செய்யும் அளவுக்கு சுப்ரீம் கோர்ட் கடந்த 20-ஆம் தேதி அதில் திருத்தங்களை மேற்கொண்டது.
இதற்கு தலித்துகள் எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற கலவரத்தில் போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 பேர் பலியாகியுள்ளனர்.

பாஜக எதிரானது
சட்டத்திருத்தத்தை கண்டித்து காங்கிரஸ், ஆர்ஜேடி, பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜவாதி ஆகிய கட்சிகளும் போராட்டங்களில் ஈடுபட்டன. அப்போது பாஜக தலித்துகளுக்கு எதிரானது என்ற கருத்தை முன்வைத்தன. தலித் பிரச்சினையை கையில் எடுத்துக் கொண்டு வரும் 2019-ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் ஒன்றிணைந்து பிரசாரம் செய்யும் என தெரிகிறது.

23 சதவீத வாக்கு வங்கி
எனினும் தலித் போராட்ட வரும் மே 12-ஆம் தேதி நடைபெறும் கர்நாடக சட்டசபை தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என்றே தெரிகிறது. கர்நாடகாவில் தலித் சமூகத்தினர் கணிசமாக உள்ளனர். அவர்களின் வாக்கு வங்கி 23 சதவீதம் ஆகும். எனவே இங்கு போட்டியிடும் கட்சிகள் தலித் வாக்கு வங்கியை, வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் காரணியாக பார்க்கின்றன என்பதால் அதன் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருக்கும்.

காங்கிரஸ் சித்தரிப்பு
சித்தராமையா தலித் வாக்குகளை குறி வைத்து வருகிறார். தலித்துகளின் வாக்குகளை பெறுவதே கட்சிக்கு முக்கியம் என்பதையும் அது ஆட்சியை தக்க வைக்க உதவும் என்பதையும் அவர் தெரிந்து வைத்துள்ளார். பாஜக தலித்துகளுக்கு எதிரானது என்று சித்தரிக்க காங்கிரஸ் தொடர்ந்து முயற்சிக்கிறது. இப்போதைய தலித்துகள் போராட்டத்தை இதற்கு உதாரணமாக சித்தராமையா கூறி பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த்ுள்ளார்.

காங்கிரசுக்கு சாதகம்
எனவே ரோஹித் வேமுலா தற்கொலை விவகாரம், வடமாநிலங்களில் நடைபெறும் தலித் போராட்டம் ஆகியவற்றை பார்க்கும்போது கர்நாடக தேர்தலில் இவை காங்கிரஸுக்கு சாதகமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மீண்டும் பலமானதாக மாற்றுவதில் மத்திய அரசு எடுக்கும் முயற்சிகளை வைத்துதான் கர்நாடகாவில் அக்கட்சியின் எதிர்காலம் அமையப்போகிறது.












Click it and Unblock the Notifications