ஒடிஷா: அழிவின் விளிம்பில் இருக்கும் போண்டா பழங்குடியினத்தில் இருந்து முதல் எம்.எல்.ஏ. தேர்வு!!
மல்காங்கிரி: இந்தியாவில் அழிவின் விளிம்பில் இருக்கும் போண்டா பழங்குடியினத்தவரில் இருந்து முதலாவது எம்.எல்.ஏவாக தம்பரு சிசா தேர்வ்சு செய்யப்பட்டுள்ளார்.
ஒடிஷா மாநிலத்தின் மல்காங்கிரி மாவட்டத்தில் 'போண்டா ஹில்ஸ்" என்ற மலைப்பகுதி உள்ளது. இங்கு போண்டா எனப்படும் ஆதிபழங்குடிகள் வாழ்ந்து வருகின்றனர்.

போண்டா பெண்கள்
இந்தியாவில் இப்பகுதியில் மட்டுமே போண்டா பழங்குடி இனத்தவர் வாழ்கின்றனர். இப்பழங்குடி இனப் பெண்கள் கழுத்து நிறைய பெரிய வளையங்கள், காலுக்கு மேலான துண்டு போன்ற கீழாடை, உடல் முழுக்க கயிறு, பாசிகளால் மறைக்கப்பட்ட மேலாடை, தலையில் சணல் வளையம் என ஆதிகால பண்பாட்டை இன்னமும் பின்பற்றுகிறவர்களாக போண்டா பழங்குடி இனத்தவர் வாழ்ந்து வருகின்றனர்.

சிறுவர்களை திருமணம் செய்யும் பெண்கள்
போண்டா பழங்குடியின திருமணமுறை மிகவும் வித்தியாசமானது. சிறுவர்களைத்தான் இளம்பெண்கள் திருமணம் செய்து கொள்வது வழக்கம்.

மாவோக்கள் கோட்டை
போண்டா ஹில்ஸ் பகுதி இப்போது மாவோயிஸ்டுகளின் கோட்டையாக இருக்கிறது.

முதல் எம்.எல்.ஏ. தம்பரு
இங்கு அண்மையில் நடைபெற்ற ஒடிஷா சட்டசபை தேர்தலில் ஆளும் பிஜூ ஜனதா தளம் சார்பில் போட்டியிட்ட 33 வயது தம்பரு சிசா வெற்றி பெற்று போண்டா பழங்குடியினத்தின் முதல் எம்.எல்.ஏவாக இருக்கிறார்.

சித்ரகோண்டா
தம்பரு சிசா, சித்ரகோண்டா சட்டசபை தொகுதியில் போட்டியிட்டார். போண்டா ஹில்ஸ்க்கு செல்லும் சமவெளிப்பகுதிதான் சித்ரகோண்டா.

கல்வி அறிவு 8%
தற்போது எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தம்பரு சிசா, கணிதவியல் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவர். போண்டா மக்களிடத்தில் கல்வியறிவு வெறும் 8% மட்டுமே இருப்பதால் அப்பகுதியில் கல்வி அறிவுக்குத்தான் முதல் முன்னுரிமை கொடுப்பேன் என்கிறேன் தம்பரு.

பெற்றோரை இழந்தவர்
12 வயதில் பெற்றோரை இழந்த தம்பரு சிசா, கோரபுட் மாவட்டத்தில் உள்ள சர்வோதய சமிதி என்ற நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டு கல்வி கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications