Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தயாநிதி மாறனின் முன் ஜாமீனை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தை அணுக சிபிஐ திட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சட்டவிரோத டெலிபோன் எக்சேஞ்ச் வழக்கில் தயாநிதி மாறன் பெற்றுள்ள முன்ஜாமீனை ரத்து செய்ய சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2004, மே மாதம் முதல் 2007, மே மாதம் வரை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்தார். 2007ல் அமைச்சர் பதவியில் இருந்து அவர் விலகியதும், திமுக மக்களவை உறுப்பினராக நீடித்தார். அப்போது அமைச்சர் என்ற முறையில் தனக்கு ஒதுக்கப்பட்ட தொலைபேசி எண் "24371515' சேவையை "எம்.பி. ஒதுக்கீட்டுக்கானதாக மாற்றித் தரும்படி பிஎஸ்என்எல் தலைமை அதிகாரிக்கு அவர் கடிதம் அனுப்பினார். இதையடுத்து, "தயாநிதி மாறன் குறிப்பிட்ட "2437' எனத் தொடங்கும் தொலைபேசி எண்ணுக்குரிய சேவை, சாதாரண பயன்பாட்டுக்கானதல்ல. அதனுடன் நூற்றுக்கணக்கான தொலைபேசி சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன' என்பது கண்டறியப்பட்டு, மேலதிகாரிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டது.

சட்ட விரோத டெலிபோன் எக்சேஞ்ச்

சட்ட விரோத டெலிபோன் எக்சேஞ்ச்

2007ம் ஆண்டு மார்ச் மாதம் 24371515 என்ற ஒரு எண்ணில் இருந்து மட்டும் 48 லட்சத்து 72,027 ரூபாய் அளவிற்கு டெலிபோன் கால் பயன்படுத்தப்பட்டுள்ளதாம். 323 தொலைபேசி லைன்கள் மூலம் கிட்டத்தட்ட ரூ.440 கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது சி.பி.ஐயின் புகாராகும்.

சி.பி.ஐ குடைச்சல்

சி.பி.ஐ குடைச்சல்

இந்த வழக்கு தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி கடந்த 29ம் தேதி, தயாநிதிமாறனுக்கு ஃபேக்ஸ் மூலமும் தொலைபேசி மூலமும் தகவல் அனுப்பியது சி.பி.ஐ. ஏற்கெனவே, இந்த வழக்கில் கண்ணன், ரவி, கௌதமன் என சன் டி.வி ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் தானும் கைது செய்யப்படலாம் என்று அஞ்சிய தயாநிதிமாறன், சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.

ரத்து செய்ய அணுகலாம்

ரத்து செய்ய அணுகலாம்

தயாநிதிமாறன் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். அப்படி ஒத்துழைக்காத நேரத்தில், அவருடைய முன் ஜாமீனை ரத்து செய்வது தொடர்பாக நீதிமன்றத்தை சி.பி.ஐ அணுகலாம் என்று குறிப்பிட்டு முன் ஜாமீன் வழங்கினார் நீதிபதி.

பல கேள்விகள் ஒரே பதில்

பல கேள்விகள் ஒரே பதில்

கடந்த 1ம் தேதி 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. 2ம் தேதியும் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. அப்போது அவரிடம் சுமார் 35 கேள்விகள் கேட்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் ஒரு உண்மையைக் கூட தயாநிதி ஒப்புக்கொள்ளவில்லை. என் வீட்டில் ஒரே ஒரு இணைப்புதான் இருந்தது என்று திரும்ப திரும்ப ஒரே பதிலை மட்டுமே சொன்னாராம் தயாநிதி.

சி.பி.ஐ அதிரடி

சி.பி.ஐ அதிரடி

ஆனால் விசாரணைக்கு தயாநிதி மாறன் ஒத்துழைப்பு தராவிட்டால் முன் ஜாமீனை ரத்து செய்யக்கோரலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளதால் அடுத்த அஸ்திரத்தை பிரயோகிக்க முடிவு செய்துள்ளனர் சி.பி.ஐ அதிகாரிகள். அதாவது தயாநிதி மாறனின் முன் ஜாமீனை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தை அணுக உள்ளார்களாம்.

இழப்பு எவ்வளவு

இழப்பு எவ்வளவு

பி.எஸ்.என்.எல் தலைமைப் பொதுமேலாளர் பெயரில் இணைப்புகள் அலுவலக உபயோகத்திற்கு கொடுக்கப்பட்டது போலவும், அந்த கேபிள்கள் பதிப்பதற்கு ரூ.1.8 கோடி மட்டுமே இழப்பு என்பது போலவும் செய்திகள் வெளியாகச் செய்கிறார் தயாநிதி. ஆனால், உண்மையிலேயே தயாநிதி மாறனின் வீட்டில் நிறுவப்பட்டிருந்தது 323 இணைப்புகள் மட்டுமல்ல, 764 அதிவேக ஐ.எஸ்.டி.என் இணைப்புகள் என்று தற்போது மீண்டும் ஒரு புது குண்டினை போடுகிறார் வழக்கின் சூத்திரதாரி ஆடிட்டர் குருமூர்த்தி. இதன்மூலம் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு பலநூறு கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டது உண்மை என்றும் அவர் கூறியுள்ளார்.

உண்மை கண்டறியும் சோதனை

உண்மை கண்டறியும் சோதனை

இதனிடையே சி.பி.ஐ அலுவலகத்திற்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த தயாநிதி மாறன், பல்வேறு கதைகளை கூறியுள்ளார். உண்மைகளை ஒப்புக்கொள்ளவே இல்லை. எனவே தயாநிதி மாறனை மீண்டும் விசாரணைக்கு அழைத்து, உண்மை கண்டறியும் சோதனை நடத்தவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன் ஜாமீன் ரத்தாக வாய்ப்பு?

முன் ஜாமீன் ரத்தாக வாய்ப்பு?

முன்ஜாமீன் பெற்றுள்ள தயாநிதி மாறனின் முன்ஜாமீனை ரத்து செய்ய உயர்நீதிமன்றத்தை சி.பி.ஐ.அதிகாரிகள் அணுக முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் முன்ஜாமீன் ரத்து செய்யப்படும் பட்சத்தில் மீண்டும் விசாரணைக்கு அழைத்து ஆதாரப்பூர்வமாக கைது செய்ய முடிவு செய்துள்ளனராம் சி.பி.ஐ அதிகாரிகள்.

பொறுத்திருந்து பார்க்கலாம்

பொறுத்திருந்து பார்க்கலாம்

தயாநிதி மாறனின் முன்ஜாமீனை உயர்நீதிமன்றம் ரத்து செய்யவதைப் பொறுத்தே சி.பி.ஐ அதிகாரிகளின் அடுத்த நடவடிக்கை இருக்கும். மொத்தத்தில் சட்ட விரோத டெலிபோன் எக்சேஞ்ச் வழக்கில் தயாநிதிமாறனுக்கு பிடி இருகுவதாகவே தெரிகிறது. தயாநிதி மாறனுக்கு இந்த ‘குரு பெயர்ச்சி' கைக்கு விலங்கு மாட்டுமா? தப்பிக்க வைக்குமா? இன்னும் சில தினங்களில் தெரியவரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+