நாலாப்புறமும் துப்பாக்கிச் சப்தம்.. நான் பிழைக்க மாட்டேன்.. பத்திரிகையாளர் செல்பி வீடியோவில் சோகம்
Recommended Video

ராய்ப்பூர்: நாலாப்புறமும் துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்பதால் நான் பிழைக்க மாட்டேன் என பத்திரிகையாளர் இறுதியாக தனது தாய்க்கு உருக்கமாக பேசியுள்ளார். இதையடுத்து அவரும் இந்த சம்பவத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சத்தீஸ்கரின் தாண்டேவாடா பகுதியில் தேர்தல் குறித்த செய்திகளை சேகரிக்க செய்தியாளர்கள் சென்றனர். அப்போது காட்டுப் பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் மாவோயிஸ்டுகளுக்கு இடையே கடும் சண்டை நடந்தது. இந்த சண்டையின் போது செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீதும் நக்சல் தாக்குதல் நடத்தி உள்ளது.
அங்கு செய்தி சேகரித்துக் கொண்டிருந்த தூர்தர்ஷன் செய்தியாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதில் தூர்தர்ஷன் வீடியோ கேமரா மேன் மீது குண்டு பாய்ந்ததில் அவர் கொல்லப்பட்டார்.

உருக்கமான பேச்சு
இந்த தாக்குதலில் 2 பாதுகாப்பு படை வீரர்களும் பலியாகி உள்ளனர். இந்நிலையில் கேமராமேன் இறப்பதற்கு முன்னர் தனது தாயிடம் உருக்கமாக பேசும் செல்பி வீடியோ வெளியாகியுள்ளது.

செய்தி சேகரிப்பு
அந்த வீடியோவில் அவர் கூறுகையில் நக்சலைட்டுகள் எங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். தாண்டேவாடாவில் தேர்தல் செய்திகளை சேகரித்து கொண்டிருந்தோம். நாங்கள் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தோம். ராணுவமும் எங்களுடன் இருந்தது.
|
சுட்டுக் வருகின்றனர்
அப்போது நக்ஸல் தீவிரவாதிகள் எங்களை சுற்றி வளைத்தனர். நாலாப்புறமும் நக்ஸலைட்டுகள் சூழ்ந்து தாக்குதல் நடத்தினர். என்னுடன் வந்தவர்களையும் சுட்டு வருகின்றனர். இதில் பிழைக்க மாட்டேன் என்று கருதுகிறேன். உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு வேளை பிழைத்து வந்தால் என் தாயார் மீது வைத்துள்ள அன்பை அவருக்கு புரிய வைப்பேன்.

பயமாக உள்ளது
நானும் இவர்களால் சுட்டுக் கொல்லப்படலாம். இங்கு நிலைமை மிக மோசமாக உள்ளது. அது ஏன் என்று தெரியவில்லை. என் கண் முன் நக்ஸல்கள் எல்லாரையும் சுட்டுக் கொன்று வருகின்றனர். எனக்கு பயமாக உள்ளது. நான் பிழைப்பது கடினம்.

கொல்லப்பட்டார்
எங்களுடன் 6 முதல் 7 பாதுகாப்பு வீரர்கள் மட்டுமே உள்ளனர். நக்ஸல்கள் நாலாப்பக்கமும் எங்களை சுற்றி வளைத்துள்ளனர் என்றார். இந்த நிலையில் அவரும் சுட்டுக் கொல்லப்பட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications