கேஜ்ரிவால், கீர்த்தி ஆசாத் மீது அவதூறு வழக்கு தொடர டெல்லி கிரிக்கெட் சங்கம் முடிவு
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பாஜக எம்பி கீர்த்தி ஆசாத் ஆகியோர் மீது அவதூறு வழக்கு தொடர டெல்லி கிரிக்கெட் சங்கம் முடிவு எடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் அருண் ஜேட்லி, கடந்த 2013-ம் ஆண்டுவரை, சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக பதவி வகித்தார். அப்போது, டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பாக போலியாக பல்வேறு நிறுவனங்கள் தொடங்கப்பட்டு பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாகவும், அதில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் ஆம் ஆத்மி கட்சி பகிரங்கமாக குற்றம்சாட்டியது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கும், கேஜ்ரிவாலுக்கும் இடையே சர்ச்சை நிலவி வருகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்த ஒரு நபர் விசாரணை கமிஷனை டெல்லி அரசு அமைத்துள்ளது. அதேபோல், கீர்த்தி ஆசாத்தும் டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.
இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுக்களை முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது என்று டெல்லி கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மறுத்துள்ளனர்.
இதுகுறித்து டெல்லி கிரிக்கெட் சங்க பொருளாளர் ரவிந்தர் மஞ்சாடா கூறுகையில், அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வரும் கேஜ்ரிவால் மற்றும் கீர்த்தி ஆசாத் மீது அவதூறு வழக்கு தொடரப்படும். டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடு குறித்து ஏற்கனவே, மூன்று அமைப்புகள் விசாரணையில் ஈடுபட்டு வருகிறது. எனவே, புதிய கமிஷனின் விசாராணை தேவையில்லாத ஒன்று என தெரிவித்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications