நிர்பயாவை சீரழித்த பாவிகளில் ஒருவர் பாதுகாப்புக்காக வேறு சிறைக்கு மாற்றம்
டெல்லி: நிர்பயாவை சீரழித்து, கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்றுள்ள 4 பேரில் ஒருவர் பாதுகாப்பு காரணங்களுக்காக திஹாரில் உள்ள மூன்றாவது எண் கொண்ட பிரிவில் இருந்து 5வது பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
டெல்லியில் ஓடும் பேருந்தில் பிஸியோதெரபி மாணவி நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்றுள்ளவர்களில் ஒருவரான வினய் ஷர்மா திஹார் சிறையில் உள்ள மூன்றாம் எண் கொண்ட பிரிவில் இருக்கும் தன்னை சக கைதிகள் அடிக்கடி தாக்குவதாகக் கூறி தன்னை 5வது பிரிவுக்கு மாற்றுமாறு நீதிமன்றத்தை அணுகினார்.

இதையடுத்து அவர் 5வது பிரிவு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் இருக்கும் இடத்தை சிசிடிவி கேமரா மூலம் போலீசார் கண்காணித்து வருகிறார்கள். வினய் முன்னதாக 5வது பிரிவு சிறைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அங்கு போதிய தனி அறைகள் இல்லாததால் பாதுகாப்பு கருதி மூன்றாம் எண் கொண்ட சிறைக்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிர்பயா வழக்கில் அக்ஷய் தாகூர், வினய் ஷர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை டெல்லி உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதை எதிர்த்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
அந்த நான்கு பேரும் கொள்ளையடித்த வழக்கின் இறுதி வாதம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications