ஆற்றில் பிணமாக மிதந்த நடிகை ஷில்பாவின் காதலர் கேரளாவில் கைது
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் கரமனை ஆற்றில் பிணமாகக் கிடந்த மலையாள நடிகை ஷில்பாவின் காதலர் லிஜினை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வெள்ளநாட்டைச் சேர்ந்த ஷாஜியின் மகள் ஷில்பா(19). பிளஸ் 2 படித்திருக்கும் அவர் தமிழ், மலையாள படங்கள் மற்றும் டிவி தொடர்களில் நடித்து வந்தார். கடந்த 17ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.

ஷில்பாவை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 18ம் தேதி ஷில்பா திருவனந்தபுரம் கரமனை ஆற்றில் மருதூர் கடவு பாலம் அருகே பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் ஷில்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே ஷில்பாவின் சாவில் மர்மம் இருப்பதாகவும், இது குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறி அவரது பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர். அவர்களின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 17ம் தேதி ஷில்பாவுடன் வெளியே சென்ற அவரது புகைப்படக்காரரும், காதலருமான லிஜின் தலைமறைவானதை அறிந்தனர்.
இதையடுத்து லிஜினை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் ஷில்பாவுடன் பணியாற்றிய நபர்கள், அவரின் தோழிகளிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் லிஜின் நேற்று காலை காட்டாக்கடையில் இருக்கும் பெட்ரோல் பங்க் ஒன்றில் தனது நண்பர்களுடன் இருந்ததை போலீசார் பார்த்தனர். உடனே போலீசார் லிஜினை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஷில்பா எப்படி இறந்தார் என்ற தகவல் நிச்சயம் லிஜினிடம் இருந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications