தற்கொலை முயற்சி குற்றமல்ல: அரசு எப்படி இந்த திடீர் முடிவை எடுத்தது?
டெல்லி: தற்கொலை முயற்சி இனி குற்றமாக கருதப்படமாட்டாது என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. தற்கொலை முயற்சி குற்றம் என்று கூறும் சட்டப்பிரிவு 309ஐ மத்திய அரசு இன்று நீக்கியுள்ளது. பொருந்தாத சட்டம் என்று பலரும் விமர்சித்த நிலையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

சட்டப்பிரிவு 309ல் என்ன உள்ளது?
இந்திய தண்டனை சட்டப் பிரிவு 309ன் படி தற்கொலைக்கு முயற்சி செய்வது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். தற்கொலைக்கு முயன்று சிக்குபவர்களுக்கு இந்த சட்டத்தின்படி ஓராண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

உதவி தேவை
சட்டப்பிரிவு 309ஐ நீக்கியதற்கு காரணம் அது இயற்கைக்கு பொருந்தாத சட்டமாக உள்ளதால் தான். இந்த சட்டப்பிரிவை நீக்க வேண்டும் என்று கடந்த 2011ம் ஆண்டிலேயே பரிந்துரைக்கப்பட்டது. பொதுவாக தற்கொலை முயற்சி செய்பவர்கள் மனவேதனையில் தான் அவ்வாறு செய்கிறார்கள். அவர்களுக்கு உதவி தேவை. ஆனால் சட்டமோ அவர்களின் துயரை அதிகரிப்பது போன்று தண்டனை வழங்கி வந்தது.

நல்லது
அரசின் முடிவு நல்லது என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தற்கொலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு தேவை உதவி தானே தவிர தண்டனை அல்ல. ஆங்கிலேயர் காலத்து தண்டனைகளை தொடர்ந்து அளித்து வரும் இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் திருத்தப்பட அல்லது நீக்கப்பட வேண்டும் என்று பலர் விவாதம் செய்து வருகிறார்கள்.
சட்ட கமிஷன் 2008ம் ஆண்டில் சமர்பித்த தனது 210வது அறிக்கையில் சட்டப்பிரிவு 309ஐ வாபஸ் பெறுமாறு பரிந்துரை செய்தது. ஏற்கனவே மன வேதனையில் இருக்கும் ஒருவருக்கு மேலும் வேதனை அளிக்கும் வகையில் தண்டனை அளிப்பது முறையல்ல என்று கமிஷன் தெரிவித்தது.

ஐரம் ஷர்மிளா
மணிப்பூரைச் சேர்ந்த ஐரம் ஷர்மிளாவுக்கு எதிராக சட்டப்பிரிவு 309ன்படி வழக்குப்பதிவு செய்தபோது போது தான் இந்த சட்டம் பற்றிய விவாதம் சூடுபிடித்தது. அவர் ராணுவ சிறப்பு அதிகார சட்டத்திற்கு எதிராக 12 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். தற்போது 309ம் சட்டப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் பலருக்கு வசதியாக இருக்கும்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications