ஆம் ஆத்மி உட்கட்சி மோதல் வலி நிறைந்ததாக உள்ளது: அரவிந்த் கேஜ்ரிவால்
டெல்லி: ஆம் ஆத்மி கட்சிக்குள் நடக்கும் மோதல்கள் வலி நிறைந்ததாக இருக்கிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கவலை தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அந்த கட்சியின் அமைப்பாளரான அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வராகப் பதவி ஏற்று உள்ளார்.

இந்தநிலையில் ஆம் ஆத்மி கட்சியில் மூத்த தலைவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. கேஜ்ரிவாலுக்கு எதிராக மூத்த தலைவர்களான பிரசாந்த் பூஷணும், யோகேந்திர யாதவும் போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார்கள். இதற்கு கட்சியில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
I am deeply hurt and pained by what is going on in the party. This is betrayal of trust that Delhi posed in us(1/2)
— Arvind Kejriwal (@ArvindKejriwal) March 3, 2015 கடந்த வாரம் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்ற போது, கேஜ்ரிவால் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த செயற்குழு உறுப்பினர்கள், அவரே அந்த பதவியில் நீடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
கட்சியின் தலைமைப் பொறுப்பில் கெஜ்ரிவால் நீடிப்பார். அவரை நீக்குவது என்ற கேள்விக்கே இடம் இல்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் சிங் தெரிவித்தார்.
இந்நிலையில் கட்சிக்குள் தற்போது நடைபெறும் சம்பங்கள் காயம் மற்றும் வலியை ஏற்படுத்த செய்துள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்து உள்ளார். இது டெல்லி மக்கள் நமது மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு புறம்பானதாக உள்ளது என்றும் கேஜ்ரிவால் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications