டேராடூன் என்கவுன்ட்டர் வழக்கில் 17 போலீசார் குற்றவாளிகள் என தீர்ப்பு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: உத்தர்காண்ட் மாநிலம் டேராடூனில் 5 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட போலி என்கவுண்ட்டர் வழக்கில் 17 போலீசாரை குற்றவாளிகள் என்று டெல்லி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2009ஆம் ஆண்டு உத்தர்காண்ட்டின் டேராடூனில் எம்.பி.ஏ மாணவர் ரன்பீர்சிங், என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த என்கவுன்ட்டரை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.
பின்னர் இது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சிபிஐ விசாரணை நடத்தியதில் டேராடூன் என்கவுன்ட்டர் போலியானது என்று கூறியதுடன் 17 போலீசார் மீதும் குற்றம்சாட்டியிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி சிபிஐ நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட 17 போலீசாரையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ளது.












Click it and Unblock the Notifications