டெல்லியில் மணிப்பூர் சிறுமி பாலியல் பலாத்காரம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
தெற்கு டெல்லியில் முன்ரிகா பகுதியில், கடைக்குச் சென்ற சிறுமியை கடத்திச் சென்ற நபர், அந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இச் நேற்று இரவு 10.30 மணிக்கு நடைபெற்றுள்ளது.
பின்னர் இது குறித்து சிறுமி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் பலாத்காரம் செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
அண்மையில்தான் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தை சேர்ந்த மாணவர் டெல்லியில் படுகொலை செய்யப்பட்டார். அவரது மரணத்துக்கு நீதிகேட்டு வடகிழக்கு மாநில மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இன்னும் இந்த விவகாரம் ஓய்வதற்குள் டெல்லியில் மணிப்பூர் மாநில சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications