மாங்கல்ய தோஷத்தை கழிப்பதற்காக புராரி குடும்பம் நடத்திய மரண வேள்வி... போலீஸ் விசாரணையில் புது தகவல்
டெல்லி புராரி வழக்கில் இறந்த பெண்ணுக்கு மாங்கல்ய தோஷம் இருந்ததால் அதை கழிப்பதற்காக இந்த தூக்கு சம்பவம் நடைபெற்றதா என போலீஸ் சந்தேகம்.
Recommended Video

டெல்லி: புராரி வழக்கில் இறந்த பிரியங்காவுக்கு மாங்கல்ய தோஷம் இருந்ததால் திருமணம் தடையானது. இதை கழிப்பதற்காக புராரி குடும்பம் மரண வேள்வி நடத்தியதாக போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது..
டெல்லியில் புராரியில் ஒரு இரட்டை அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 11 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து ஒரு முடிவுக்கு வரமுடியாமல் போலீஸார் தவிக்கின்றனர்.

சமையலறையில்
வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு டைரியில் சில குறிப்புகள் இருந்தன. அதிலிருந்து இந்த சம்பவம் தூக்கிட்டு தற்கொலை என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். எனினும் வீட்டு சமையலறையில் போலீஸார் சோதனை நடத்திய போது மறுநாள் காலை சிற்றுண்டி செய்வதற்காக கடலை பருப்பு நீரில் ஊற வைக்கப்பட்டிருந்தது.

முகாந்திரம் இல்லை
பாலை தயிராக்கும் விதமாக பெர்மன்டேஷனுக்காக ஒரு பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்தது. மேலும் வீட்டில் இந்த ஆண்டு இறுதியில் ஒரு திருமணம் நடைபெறவுள்ளது. இதனால் வீட்டினர் மகிழ்ச்சியாக உள்ளனர். இதை வைத்து பார்க்கும் அந்த குடும்பத்தினர் தற்கொலை செய்வதற்கான முகாந்திரம் இல்லை என்றும் போலீஸார் நம்புகின்றனர்.

மகன்தான் காரணம்
மேலும் அமானுஷ்ய கடிதத்தின்படி நாராயணி தேவியின் மகன் லலித்தான் இந்த தற்கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. அவருக்கு அமானுஷ்யங்களின் மேல் நம்பிக்கை உள்ளது என்றும் அவர்தான் மீதமுள்ள 10 பேரையும் மூளைச்சலவை செய்து தற்கொலைக்கு தூண்டியிருப்பார் என்று தெரிகிறது.

தெரியவில்லை
இந்நிலையில் நாராயணியின் பேத்தி பிரியங்கா திருமணம் செய்து கொள்ளவிருந்த மாப்பிள்ளையிடம் போலீஸார் துருவி துருவி 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். பெண் வீட்டாருக்கு அமானுஷ்யங்களில் நம்பிக்கை இருப்பதாக தனக்கு தெரியவில்லை என்றார்.

மாங்கல்ய தோஷம்
பிரியங்காவுக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதால்தான் திருமணம் நடைபெற காலதாமதம் ஆனதாக கூறப்படுகிறது. எனவே தோஷம் கழிப்பதற்காக இந்த மாஸ் தற்கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற தகவல் போலீஸாருக்கு கிடைத்துள்ளது. திருமணம் கைகூடி விட்ட நிலையில் இதை ஏன் செய்தனர் என்ற குழப்பமும் நிலவுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications