கிரிக்கெட் சங்க ஊழல்: ஒருநபர் விசாரணை கமிஷன்- டெல்லி அமைச்சரவை ஒப்புதல்!
டெல்லி: கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் தலைமையில் ஒருநபர் கமிஷன் அமைக்க டெல்லி மாநில அரசின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லி மாநில அரசு தலைமை செயலகம், முதல்வர் கேஜ்ரிவால் அலுவலகம் ஆகியவற்றில் அண்மையில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தியது. டெல்லி முதன்மை செயலர் ராஜேந்திர குமார் மீதான ஊழல் புகாரின் மீதான விசாரணையின் ஒருபகுதியே இந்த ரெய்டு என சி.பி.ஐ. தரப்பில் கூறப்பட்டது.

ஆனால் கேஜ்ரிவாலோ, நிதி அமைச்சர் அருண்ஜேட்லிக்கு தொடர்புடைய டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் புகார் தொடர்பான ஆவணங்களைக் கைப்பற்றத்தான் இந்த சோதனையை சி.பி.ஐ. நடத்தியதாக குற்றம்சாட்டினார். மேலும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களும், டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக ஜேட்லி பதவி வகித்த காலத்தில் ஊழல் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம்சாட்டியிருந்தனர்.
இதனிடையே டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் குறித்து விசாரணை நடத்த முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்படும் எனவும் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்திருந்தார்.
ஆனால் தம் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்த ஜேட்லி, கேஜ்ரிவால் உள்ளிட்டோர் மீது ரூ10 கோடி கேட்டு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் டெல்லி மாநில அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் கேஜ்ரிவால் தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில், டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடு தொடர்பான விசாரணை நடத்த முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷன் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications