ஜனலோக்பாலுக்கு காங். ஆதரவு தரவில்லையென்றால் ராஜினாமா: கெஜ்ரிவால்
டெல்லி: ஜனலோக்பால் மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு தரவில்லையென்றால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக மிரட்டியுள்ளார் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால்.
நடந்து முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலின்போது, முதல்வர் முதல் அடிமட்ட ஊழியர் வரை யார் ஊழல் செய்தாலும், அவர்களுக்கு ஆயுள்தண்டனை வரை விதிக்க வகைசெய்யும் ஜனலோக்பால் சட்டத்தைக் கொண்டு வருவதாக ஆம் ஆத்மி வாக்குறுதி அளித்தது.

அதன்படி, முதல்வராக பதவியேற்ற அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நடவடிக்கை எடுத்து வருகிறார். இது தொடர்பான மசோதாவுக்கு டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஆனால், இந்த மசோதாவின் வரைவு அறிக்கையை கசிய விட்டதாகக் கூறி டெல்லி துணை நிலை கவர்னர் நஜீப் ஜங்குடன் கெஜ்ரிவால் மோதல் போக்கை கடைப்பிடிக்கத் தொடங்கினார்.
டெல்லி மாநில அரசின் மசோதாவுக்கு எதிராக காங்கிரசும், பாரதீய ஜனதாவும் போர்க்கொடி உயர்த்தின. அதனை தொடர்ந்து, ‘ஊழல் என்பது மிகவும் முக்கியமான பிரச்சினை. ஜனலோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்காக எந்த எல்லைக்கும் போவேன்'' எனத் தெரிவித்தார் கெஜ்ரிவால்.
இந்நிலையில், தற்போது "காங்கிரஸ் கட்சி ஜன்லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய ஆதரவு கொடுக்கவில்லை என்றால் தனது பதவியை ராஜினாமா செய்ய போவதாகவும், டெல்லி அரசு கவிழும் எனவும் எச்சரித்துள்ளார் கெஜ்ரிவால்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications