ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு தடை விதிக்க முடியாது.. டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
டெல்லி: ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
டெல்லியில் ஆம் ஆத்மி அரசு கடந்த 2015-ஆம் ஆண்டு பதவியேற்றது. மொத்தம் இருக்கும் 70 இடங்களில் 66 இடங்களில் அந்த கட்சி வெற்றி பெற்றது. இதில் அல்கா லம்பா, ஜர்னைல் சிங், ஆதர்ஷ் சாஸ்திரி, ராஜேஷ் குப்தா உள்ளிட்ட அனைவரும் எம்.எல்.ஏவாக இருந்து கொண்டே பார்லிமென்ட்ரி செக்ரெட்டரி எனப்படும் அமைச்சர்களின் செயலாளர்கள் என்ற பதவியில் செயல்பட்டு வந்தனர்.

எம்.எல்.ஏ.க்களாக இருக்கும் யாரும் இப்படி இரண்டு பணிகளில் ஈடுபட கூடாது என்ற சட்டம் இருக்கிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளிக்கப்பட்டது.
இதன் காரணமாக தற்போது குடியரசு தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்துக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை ஒன்று வழங்கியது. அதில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்யலாம் என்று கூறியது.
இந்த பரிந்துரை ஏற்கப்பட்டு இவர்கள் 20 பேரும் பதவிநீக்கம் செய்யப்பட்டார்கள். ஆம் ஆத்மி இதற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறது.
இதில் தகுதி நீக்கத்திற்கு உடனடியாக இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தது. இதை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று விசாரித்தனர்.
அதில் ''ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது. எம்.எல்.ஏக்கள் மீதான தடை தொடரும்'' என்று குறிப்பிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
