ஊழல் வழக்குக்கு தடை விதிக்க முடியாது... அன்புமணிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் "செக்"!
டெல்லி: முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது, விதிகளை மீறி மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதாக தொடரப்பட்டுள்ள வழக்கை கீழ் நீதிமன்றம் விசாரிக்கத் தடை இல்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அன்புமணி தாக்கல் செய்த மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக அன்புமணி ராமதாஸ் இருந்த போது, மத்திய பிரதேசம் இந்தூரிலும், லக்னோவிலும் தனியார் மருத்துவக் கல்லூரி தொடங்க விதிமுறைகளை மீறி அனுமதி அளித்ததாக புகார் எழுந்தது. இந்தப் புகார் தொடர்பாக அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 9 பேர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது. இது தொடர்பான விசாரணை டெல்லியில் உள்ள பாட்டியாலா ஹவுசில் சிபிஐ தனி நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

தம் மீதான குற்றச்சாட்டுப் பிரிவுகளை மாற்ற வேண்டும் என்றும் இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் அன்புமணி ராமதாஸ் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
இந்த வழக்கின் மீதான விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் இன்று வந்தது. அப்போது அன்புமணி ராமதாஸ் தாக்கல் செய்துள்ள மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், அன்புமணி மீதான இந்த ஊழல் வழக்கை விசாரிக்க சிபிஐ நீதிமன்றத்திற்கு தடையில்லை என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications