போலி கல்விச் சான்றிதழ் விவகாரம்: டெல்லி சட்ட அமைச்சர் ஜிதேந்திரசிங் தோமர் அதிரடி கைது!
டெல்லி: போலி கல்விச் சான்றிதழ் சமர்பித்ததாக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி சட்ட அமைச்சர் ஜிதேந்திர சிங் தோமர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு அம்மாநில ஆளும் ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லி மாநில சட்டத்துறை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தோமரின் கல்வி சான்றிதழ் போலியானது என்று அம்மாநில உயர் நீதிமன்றத்தில் சந்தோஷ்குமார் சர்மா என்பவர் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிமன்றம் தோமர் சட்டம் பயின்றதாகக் கூறும் பீகாரின் திலக் மாஞ்சி பாகல்பூர் பல்கலைக் கழகமானது, அவரது சான்றிதழை உறுதிபடுத்தும்படி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இதற்கு பதிலளித்த பாகல்பூர் பல்கலைகழகமோ, தோமர் கல்வி பயின்றதற்கான சான்றுகள் இல்லை; அவரது கல்வி சான்றிதழில் குறிப்பிடப்படுகிற எண் 3687, 1999ஆம் ஆண்டு படித்த சஞ்சய்குமார் சௌத்ரி என்ற மாணவருக்கானது எனவும் பதில் அனுப்பியுள்ளது.
இதனால் தோமர் சமர்பித்த சட்டக் கல்வி சான்றிதழ் போலியானது என்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து தோமர் பதவி விலக பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இந்த நிலையில் அதிரடியாக ஜிதேந்திரசிங் தோமர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் சிங் தமது ட்விட்டர் பக்கத்தி, அமைச்சர் ஜிதேந்திரசிங் தோமர் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சக கட்டுப்பாட்டில் டெல்லி போலீஸ் வருவதால் மோடி அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது என்று சாடியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications