முடிவெட்டப் போன இடத்தில் யு.எஸ். பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர்... டெல்லியில் அக்கிரமம்!
டெல்லி: டெல்லியில் முடிவெட்டுவதற்காக சென்ற அமெரிக்கப் பெண்ணிற்கு பியூட்டி பார்லரில் பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் வர்த்தக விஷயமாக டெல்லியில் உள்ள கைலாஷ் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த புதனன்று மாலை அதே பகுதியில் உள்ள பியூட்டி பார்லர் ஒன்றிற்கு முடி வெட்டுவதற்காகச் சென்றுள்ளார் அப்பெண்.
அப்போது அங்கு பணியில் இருந்த் அமித் என்ற 25 வயது இளைஞர், அப்பெண்ணிற்கு தலையில் மசாஜ் செய்து விடுவதாகக் கூறி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இளைஞரின் அத்துமீறலால் அதிர்ச்சியடைந்த பெண் பயத்தில் அலறியுள்ளார். பின்னர் தன் நண்பர்களின் உதவியுடன் இது தொடர்பாக அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதற்குள்ளாக பியூட்டிபார்லரில் இருந்து தப்பியோடிய அமித், தலைமறைவானார்.
அதனைத் தொடர்ந்து பியூட்டி பார்லர் உரிமையாளரிடம் விசாரணை நடத்திய போலீசார் அமித்தின் வீட்டிலும் சோதனை செய்தனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த அமித்தை நேற்று போலீசார் கைது செய்தனர்.
டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவமாணவி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதாகவே பெரும்பாலான மற்ற நாடுகளிடம் கருத்து உள்ளது. தங்கள் நாட்டு சுற்றுலாப் பயணிகளை இந்தியாவில் பாதுகாப்பாக இருந்து கொள்ளும் படி பல நாடுகள் வெளிப்படையாகவே எச்சரித்தும் உள்ளன.
இந்த சூழ்நிலையில், டெல்லியில் பியூட்டி பார்லரில் அமெரிக்கப் பெண் ஒருவர் பாலியல் தொந்தரவுக்கு ஆளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications