கேட்டதும் டிபன் தரவில்லை... கோபத்தில் மனைவியை குத்திக் கொன்ற 25 வயது கணவன்
டெல்லி: காலை உணவை குறித்த நேரத்தில் பரிமாறவில்லை என்ற கோபத்தில் மனைவியை குத்தி கொலை செய்த கணவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லியை சேர்ந்த கவுதம் (25) என்பவரது மனைவி மஞ்சு(21). இவர் கடந்த செவ்வாயன்று தன் மனைவியிடம் காலை உணவு கேட்டுள்ளார்.
வீட்டு வேலையில் தீவிரமாக இருந்த மஞ்சு, சிறிது நேரம் கழித்து கணவருக்கு உணவை பரிமாறியுள்ளார். காலதாமதமாக உணவு தந்ததால் கோபமடைந்த கவுதம், சமையல் அறையில் இருந்த கத்தியால் மனைவியை குத்தியுள்ளார்.
இதில், ரத்த வெள்ளத்தில் வலியால் துடித்துள்ளார் மஞ்சு. எங்கே தான் கொலைக் குற்றத்தில் மாட்டிக் கொள்வோமோ என அஞ்சிய கவுதம் உடனடியாக மஞ்சுவை மாடியில் இருந்து கீழே தள்ளி தற்கொலையாக சித்தரிக்கப் பார்த்துள்ளார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தார் கவுதமைத் தடுத்துள்ளனர். ஆனால், அவர்களால் முடியவில்லை.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கவுதமை கைது செய்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சரியான நேரத்தில் உணவு தராத மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications