வீட்டின் பின்புறத்தில் அதிர்ச்சி..11 ஆவி வெளியேற 11 குழாய்..டெல்லி மரணத்தில் தொடரும் புதிர்கள்!
டெல்லியில் மர்ம மரணம் நடந்த வீட்டில் மொத்தம் 11 குழாய்கள் வீட்டில் இருந்து வீட்டிற்கு வெளியே சென்றுள்ளது.
Recommended Video

டெல்லி: டெல்லியில் மர்ம மரணம் நடந்த வீட்டில் மொத்தம் 11 குழாய்கள் வீட்டில் இருந்து வீட்டிற்கு வெளியே சென்றுள்ளது. இறந்தவர்களின் ஆவிகள் வெளியே செல்ல இந்த குழாய் அமைக்கப்பட்டதாக குறிப்புகளில் இடம்பெற்றுள்ளது.
எப்படி தற்கொலை செய்தால் மோட்சம் கிடைக்கும் என்று குறிப்புகள் உள்ளது. டெல்லி புராரி பகுதியில் நேற்று ஒரு வீட்டிலிருந்து 11 பிணங்கள் கண்டெடுக்கப்பட்டது. அந்த வீட்டில் போலீஸ் விசாரணையில் நிறைய கடிதங்கள், டைரிக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
அந்த வீட்டில் உள்ளே 11 பேர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். எதோ ஒரு மத சடங்கிற்காக இவர்கள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதை வைத்து போலீஸ் தீவிரமாக விசாரித்து வருகிறது.

மதம்
எப்படி தற்கொலை செய்தால் சொர்க்கத்தை அடையலாம், என்ன செய்தால் மோட்சம் கிடைக்கும் என்றெல்லாம் நிறைய குறிப்புகள் இருந்துள்ளது.அதில் முதல் குறிப்பில், எந்த நாளில் சாக வேண்டும், எப்படி சாக வேண்டும் என்று விவரமாக எழுதி இருக்கிறார்கள்.

குழாய்கள்
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் மிகவும் வித்தியாசமான விஷயம் ஒன்றும் நடந்துள்ளது. அதன்படி இன்று அந்த வீட்டில் சோதனை நடத்திய போலீஸ், வீட்டிற்கு பின் புறத்தில் 11 குழாய்கள் வெளியே வருவதை கண்டுபிடித்தனர். மொத்தமாக 11 குழாய்கள் வெளியே வந்து இணைப்பு இல்லாமல் முடிந்துள்ளது.

பெரிய குழப்பம்
இந்த குழாய்கள் உள் பக்கம் எதனுடனும் இணைக்கப்படவில்லை. அதேபோல் வெளியேவும் எதனுடனும் இணைக்கப்படவில்லை. எல்லோரும் இறந்த கிடந்த அறைக்கு அருகில் இந்த குழாய்கள் தொடங்கி வெளிப்பக்கம் வரை வந்துள்ளது.

ஆவி நம்பிக்கை
இது எதோ கண்டிப்பாக நம்பிக்கை காரணமாக இப்படி வைத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அங்கு கிடந்த குறிப்புகளில், அந்த வீட்டில் இறந்த 11 பேரின் ஆவியும் வெளியே மோட்சத்திற்கு சரியாக செல்ல இந்த குழாய் உதவும் என்று போடப்பட்டுள்ளது. ஆனாலும் போலீஸ் இதுகுறித்து இன்னும் அதிகமாக விசாரிக்க முடிவு செய்துள்ளது. தொடர்ச்சியாக அந்த வீட்டில் எல்லாமே மர்மமான விஷயமாக இருப்பதால் போலீஸ் மிகவும் அதிக அளவில் குழம்பிப் போய் உள்ளது.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications