டெல்லி எய்ம்ஸ் மாணவர் சரவணன் தற்கொலை வழக்கு.. தந்தையிடம் போலீஸ் விசாரணை
டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மாணவர் மாணவன் சரவணன் தற்கொலை வழக்கு தொடர்பாக அவரது தந்தை கணேசனிடம் விசாரணை நடத்தப்பட்டது.
டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த தமிழக மாணவர் சரவணன் தற்கொலை வழக்கு தொடர்பாக அவரது தந்தை கணேசனிடம் விசாரணை நடத்தப்பட்டது.
திருப்பூர் கோபால் தெருவைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி யுவராணி. இவர்களது மகன் சரவணன். இவர், மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பட்டம் படித்தார். பின்னர் மேல் படிப்புக்காக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்ந்தார்.

கடந்த ஜூலை 10-ஆம் தேதி அவர் தங்கியிருந்த அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்நிலையில் அவர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டதாக டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் தங்களது மகனின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் பெற்றோர் புகார் அளித்தனர்.
டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்த ரவின்பேரில் நடந்த மறுபிரேத பரிசோதனையில் கொலைக்கான சாத்தியக்கூறு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை கொலை வழக்குப்பதியப்படவில்லை. இதனையடுத்து மகனின் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சரவணனின் பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில் சரவணன் தற்கொலை வழக்கு தொடர்பாக டெல்லி மால்வியா காவல் நிலையத்தில் அவரது தந்தை கணேசனிடம் இன்று டெல்லி போலீஸார் விசாரணை நடத்தினர். இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் தெரிவித்தனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications