டெல்லியில் போராடிய தமிழக விவசாயிகள் மீது கொடூர தடியடி - கைது
டெல்லியில் ரிசர்வ் வங்கி முன்பு போராடிய தமிழக விவசாயிகள் மீது டெல்லி போலீஸ் கொடூர தடியடி நடத்தி கைது செய்துள்ளது.
டெல்லி: டெல்லியில் ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயன்ற தமிழக விவசாயிகள் மீது டெல்லி போலீஸ் கொடூரமாக தடியடி நடத்தி கைது செய்துள்ளது.
விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக் கோரியும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 25 நாட்களாக போராடி வருகின்றனர். இன்று தங்களின் கைகளை அறுத்துக்கொண்டு போராட்டம் நடத்தினர்.
இதனிடையே விவசாயக் கடன் தள்ளுபடி என்பது வங்கிகளின் நேர்மையான கடன் கொள்கைக்கு எதிரானது என்றும், நேர்மையான முறையில் கடன் பெறுவதையும் இது பாதிக்கும் என்றும் உர்ஜித் பட்டேல் கூறியுள்ளார்.

உர்ஜித் பட்டேல்
விவசாயக் கடன் தள்ளுபடியால், வங்கிகளில் கடன் பெறுபவர்கள் எதிர்காலத்தில் அதை திருப்பிச் செலுத்துவதிலும் சிக்கல் ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உர்ஜித் பட்டேலின் கருத்துக்கு டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள் கண்டனம்
தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு, விவசாயிகள் நலனில் அரசுக்கோ வங்கிகளுக்கோ அக்கறையில்லை என்றும் குற்றம்சாட்டினார். இன்று உர்ஜித் பட்டேலை கண்டித்து தமிழக விவசாயிகள் இன்று ரிசர்வ் வங்கியை முற்றுகையிடப் போவதாகவும் அறிவித்தனர்.

கொடூர தடியடி
ரிசர்வ் வங்கி முன்பு போராடிய விவசாயிகள் ஆளுநர் உர்ஜித் பட்டேலுக்கு எதிராக முழக்கமிட்டனர். ரிசர்வ் வங்கியை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் மீது டெல்லி போலீசார் கொடூரமாக தாக்கினர்.

விவசாயிகள் கைது
கடந்த 25 நாட்களாக போராடிய விவசாயிகளை கொடூரமாக தாக்கிய டெல்லி போலீஸ் அவர்களை கைது செய்தது. அவர்களை மீண்டும் ஜந்தர் மந்தர் பகுதிக்கு கொண்டு வந்தது. விவசாயிகளை தாக்கி அவர்களை கைது செய்த சம்பவம் தமிழக விவசாயிகளிடையே அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications