டெல்லி ஔரங்கசீப் சாலைக்கு அப்துல் கலாம் பெயர்... விரைவில் மாற்றம்
டெல்லி : தலைநகரில் உள்ள ஔரங்கசீப் சாலை, விரைவில் ‘ஏ.பி.ஜே.அப்துல் கலாம் சாலை'என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. இதற்காக டெல்லி நகராட்சிக் கவுன்சில் நேற்று ஒப்புதல் வழங்கி உள்ளது.
இதுபற்றி நகராட்சி துணைத் தலைவர் கரண் சிங் தன்வார் கூறியதாவது...

"முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமுக்கு புகழஞ்சலி செலுத்தி அவரை கவுரவிக்கும் வகையில், டெல்லி ஔரங்கசீப் சாலையின் பெயரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் வந்தன.
இந்த விவகாரம் நேற்று நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. அப்போது, அப்துல் கலாம் பெயரை சூட்டுவதற்கு அனுமதி அளிப்பது என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. நகராட்சி கவுன்சிலிடம்தான் இதற்கான இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது.
எனவே, வேறு சட்டரீதியான அனுமதி பெறத் தேவையில்லை"என்று கூறினார்.
இக்கூட்டத்தில் நகராட்சிக் கவுன்சில் உறுப்பினரான அரவிந்த் கெஜ்ரிவாலும் கலந்துகொண்டார். ஔரங்கசீப் சாலைக்கு அப்துல் கலாம் பெயரை சூட்ட முடிவு செய்தமைக்கு கெஜ்ரிவால் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுபற்றி பிரதமருக்கு கடிதம் எழுயிருந்த பா.ஜ.க எம்.பி. மகேஷ் கிரியும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்தியா கேட் அருகே உள்ள தாஜ் மான்சிங் ஹோட்டலில் இருந்து ஆரம்பிக்கும் ஔரங்கசீப் சாலை, பிரதமர் இல்லம் அருகில் உள்ள சப்தார்ஜங் சாலையில் முடிகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications