சத்து மாத்திரையை அதிகம் சாப்பிட்ட பள்ளிச் சிறுமி மரணம்.. டெல்லியில் பரபரப்பு
டெல்லி: டெல்லியில் உள்ள சர்வோதயா கன்யா வித்யாலாய பள்ளியில் 9ம் வகுப்பு மாணவி ஒருவர் சத்து மாத்திரையை அதிகம் சாப்பிட்டு பலியான விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த துணை முதல்வர் மனீஷ் சிசோடியா உத்தரவிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட மாணவி வசிரிப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வந்தவர். இவர் கடந்தவாரம் 4ம் தேதி பள்ளியில் 12 சத்து மாத்திரைகளைச் சாப்பிட்டதாகத் தெரிகிறது.

அதனைத் தொடர்ந்து வீடு திரும்பியதும் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்ட அம்மாணவியை இந்து ராவ் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.
பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால்தான் தங்களது மகள் இறந்ததாக சிறுமியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால், இக்குற்றச்சாட்டை பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்த துணை முதல்வர் மனீஷ் சிசோடியா உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மனீஷ் சிசோடியா கூறுகையில், ‘வசிரிப்பூரில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு மாணவி சத்து மாத்திரையை அதிகம் சாப்பிட்டு பலியானது குறித்து விசாரிக்க சரஸ்வதி விஹார் துணைக் கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் இதுகுறித்து விசாரித்து அரசிடம் அறிக்கை சமர்பிப்பார்' எனத் தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications