டெல்லியில் ஜன. 1 முதல் 15 வரை அனைத்து பள்ளிகளுக்கு 'லீவ்' விடுவது குறித்து ஆலோசனை!
டெல்லி: டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் தனியார் வாகனங்களுக்கான கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதால் ஜனவரி 1 முதல் 15-ந் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிப்பது தொடர்பாக அம்மாநில அரசு பரிசீலித்து வருகிறது.
இதுகுறித்து அம்மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நேற்று கூறியதாவது:

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் வகையில் ஒற்றைப்படை எண்களுடன் முடியும் வாகனங்கள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களிலும் இரட்டைப்படை எண்களுடன் முடியும் வாகனங்கள் செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களில் மட்டுமே இயக்கப்படவேண்டும்.
ஜனவரி மாதம் சோதனை முறையில் இது அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறோம்.
ஆகையால் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட இருக்கும் ஜனவரி 1 முதல் 15-ந் தேதி வரையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு எங்களுக்கு பரிந்துரை வந்துள்ளது. அதுகுறித்து பரிசீலித்து வருகிறோம்.
தேவையேற்பட்டால், அந்த காலகட்டத்தில் டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும்.












Click it and Unblock the Notifications