வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி மைனர் சிறுமியைப் பலாத்காரம் செய்த 11 பேர்
ஜெய்ப்பூர்: வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி, 17 வயது சிறுமியை ஹோட்டலில் அடைத்து 11 ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் ஜெய்ப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட 17 வயது சிறுமி டெல்லியைச் சேர்ந்தவர். இவரை வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிய ஒரு தம்பதி, ஜெய்ப்பூர் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் சிறுமியை அடைத்து வைத்தனர்.
அங்கு வைத்து அச்சிறுமியை 11 ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சமயம் பார்த்து அங்கிருந்து தப்பிய அச்சிறுமி டெல்லி வந்து போலீசில் புகார் அளித்தார்.
அப்போது, 24 மணி நேரம் தன்னை ஹோட்டல் அறையில் அடைத்து வைத்து 11 பேர் பலாத்காரம் செய்ததாக போலீசில் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அச்சிறுமியை அழைத்துச் சென்று அவர் அடைக்கப்பட்டிருந்த ஹோட்டலை அடையாளம் காட்டச் செய்தனர்.
பின்னர் சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்ற தம்பதி, ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட 6 பேரை அவர்கள் கைது செய்தனர்.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில், அவர் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த மற்றவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications