பதவியேற்பு விழாவில் செல்போனை பறிகொடுத்த ஆம் ஆத்மி அமைச்சர்

நடந்து முடிந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் 28 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் ஆதரவோடு கடந்த சனியன்று ஆட்சி அமைத்தது. ராம்லீலா மைதானத்தில் வைத்து நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் மேலும் சில அமைச்சர்களும் பதவியேற்றனர்.
பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பின் மகாத்மா காந்தி சமாதிக்கு சென்ற கெஜ்ரிவால், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் தலைமைச் செயலகம் வந்த அவர் அமைச்சர்களின் இலாகாக்களை அறிவித்தார்.
அதன்படி கிரிஷ் சோனிக்கு வளர்ச்சி, வேலைவாய்ப்பு, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையும், சோம்நாத் பாரதிக்கு சட்டம் மற்றும் சுற்றுலா துறையும், ராக்கி பிர்லாவிற்கு மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறையும், மணிஷ் சிசோடியாவுக்கு கல்வி மற்றும் பொதுப்பணித்துறையும், சத்யேந்திர ஜெயினுக்கு சுகாதார துறையும், சவுரவ் பரத்வாஜுக்கு போக்குவரத்து துறையும் ஒதுக்கி அவர் உத்தரவிட்டார்.
இதற்கிடையே, டெல்லி ராம்லீலா மைதானத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவியேற்ற சவுரவ் பரத்வாஜ் கூட்ட நெரிசலில் தன்னுடைய செல்போனை தொலைத்து விட்டார். அதனால், தற்போது டெல்லியின் போக்குவரத்துத் துறை அமைச்சர் செல்போன் இல்லாமல் யாரையும் தொடர்பு கொள்ள இயலாமல் தவித்து வருகிறாராம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications