ஐஎஸ் மிரட்டல் எதிரொலி: பாதுகாப்பு கோட்டையாக மாறிய டெல்லி
டெல்லி: குடியரசு தின விழா கொண்டாட்டங்களை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு செங்கோட்டையில் நடக்கும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் பிரான்ஸ் அதிபர் பிரான்காய்ஸ் ஹாலண்டே சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அவரையும், பிரதமர் நரேந்திர மோடியையும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளதால் டெல்லியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகளின் விபரம் வருமாறு,
* 15 ஆயிரம் துணை ராணுவப்படையினர், டெல்லி போலீசார் 34 ஆயிரம் பேர், தேசிய பாதுகாப்பு படையினர் 1,000 பேர் உள்பட 50 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
* டெல்லிக்குள் நுழையும் அனைத்து வாயில்களையும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
* குடியரசு தின விழா ஊர்வலத்தை கண்காணிக்க 15 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
* ராஜ்பாத்தில் இருந்து 2 கிலோமீட்டருக்குள் துப்பாக்கி சுடும் வீரர்கள் ஆங்காங்கே உள்ள உயரமான கட்டிடங்களில் தயாராக இருப்பார்கள்.
* மத்திய, வடக்கு மற்றும் புது டெல்லி மாவட்டங்களில் 20 ஆயிரம் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.
* ஹாலண்டேவுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் 20 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
* காலை 9.50 மணிக்கு துவங்கும் குடியரசு தின ஊர்வலம் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும்.
* டெல்லி வான்வெளி சிறப்பு ராடார்கள் மூலம் கண்காணிக்கப்படும்.
* விஜய் சவுக்கில் இருந்து ராஜ்பாத் வரையிலான பாதையில் போக்குவரத்து நேற்று மதியம் 3 மணியில் இருந்து குறைக்கப்பட்டுள்ளது.
* ராஜ்பாத் மீது இன்று காலை 10.35 மணி முதல் மதியம் 12.15 மணி வரை கமர்ஷியல் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
* குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடக்கையில் அனுமதியில்லாமல் பறக்கும் எதையும் சுட்டுத் தள்ள பாதுகாப்பு படையினருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
* ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் சமாளிக்கும் வகையில் ஆயிரம் போக்குவரத்து போலீசாருக்கு துப்பாக்கிகள் அளிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications