கொடுமை... தம்பியுடன் உறவு வைக்க மிரட்டிய கணவர்... கழுத்தை நெரித்துக் கொன்ற மனைவி!
தனது தொழிலை கவனித்துக் கொள்ள ஆண் வாரிசு வேண்டும். எனவே உன் தம்பியுடன் உறவு வைத்துக் கொள் என்று கூறிய கணவரை மனைவி கழுத்தை நெரித்துக் கொன்றார்.
டெல்லி: தனக்கு பின்னர் தனது தொழிலை கவனித்துக் கொள்ள ஆண் வாரிசு வேண்டும். எனவே உன் சொந்த தம்பியுடனே என் கண் முன்னால் உறவுவைத்துக் கொள்ள வேண்டும் என்று மிரட்டிய கணவரை, மனைவியும், அவரது தம்பியும் சேர்ந்து கொலை செய்தனர்.
தென்கிழக்கு டெல்லி பகுதியில் ஜெய்தபூரில் ஒரு வீட்டில் தன் கணவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கடந்த 25-ஆம் தேதி ஒரு பெண் புகார் செய்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்த சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்தனர்.
அப்போது அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் தனது வீட்டுக்கு கணவரின் நண்பர்கள் இருவர் வந்ததாகவும், அவர்களும் தனது கணவரும் ஒரு அறையில் உறங்கியதாகவும், தான் வேறு அறையில் உறங்கியதாகவும், மறுநாள் பார்த்தபோது
கணவர் கொலை செய்யப்பட்டு கிடந்ததாகவும் தெரிவித்தார்.

போலீஸ் விசாரணை
அந்த குடியிருப்பு பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பெண்ணின் பின் பக்க வாசல் வழியாக யாரோ ஒரு ஆண் கொலை செய்யப்பட்டவரின் உடமைகளை கொண்டு செல்வது போல் இருந்தது.

பெண்ணின் தம்பி
நன்கு ஆராய்ந்ததில் அந்த ஆண், இறந்தவரின் மனைவியின் உடன்பிறந்த தம்பி என்று தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீஸாரின் விசாரணை அந்த பெண்ணின் பக்கம் திரும்பியது. சந்தேகத்தின் பேரில் அவரை கைது செய்து விசாரித்ததில் பல்வேறு அருவருப்பான தகவல்கள் வெளியாகின.

பலமுறை கருக்கலைப்பு
கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் ஆனது. தனது தொழிலை கவனித்து கொள்ள ஆண் வாரிசு வேண்டும் என்று கூறி வந்தார் கணவர். இதற்காக மனைவி கருத்தரித்தபோதெல்லாம் அது பெண் குழந்தையாக இருந்தால் அபார்ஷன் செய்ய வைத்துள்ளார். இதனால் கடந்த 2010-இல் இவர்களுக்கு பிறந்த பெண் குழந்தை ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பிறந்த 4 ஆண்டுகள் கழித்து இறந்துவிட்டதாம்.

ஆண் வாரிசுக்காக
தனக்கு ஆண் வாரிசு வேண்டும் என்ற வெறி தலைக்கேறவே, என்ன பேசுகிறோம் என்பதைக் கூட உணராமல் உன் தம்பியுடன் உறவு கொண்டு பிள்ளை பெற்றுக் கொடு என்று கூறியுள்ளார். அதுவும் தன் கண் முன்பாகவே அதைச் செய்யுமாறு மனைவியையும், அவருடைய தம்பியையும் மிரட்டியுள்ளார். எதிர்ப்பு தெரிவித்தால் நண்பர்களுடன் கூட்டு பலாத்காரம் செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி விடுவதாகவும் அவர் மிரட்டினாராம்.

பொங்கி எழுந்தார்
கடந்த ஓராண்டாக பொறுமையாக இருந்த அந்தப் பெண், மீண்டும் மீண்டும் கணவரின் துன்புறுத்தல் தாளாமல் அவரை கொல்ல திட்டமிட்டார். அதன்படி சம்பவ தினத்தன்று கணவருக்கு தூக்க மருந்து கலந்து கொண்டு அவரை அந்தப் பெண்ணும், தம்பியும் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டனர். இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications