கள்ளச்சாராயம் பற்றி துப்பு கொடுத்த டெல்லி பெண்... நிர்வாணப்படுத்தி தாக்கிய ரவுடிப் பொம்பளைங்க!

டெல்லியில் குடியிருப்புப் பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்படுவது குறித்து தகவல் கொடுத்தற்காக துப்பு கொடுத்த பெண்ணை நிர்வாணப்படுத்தி, இரும்புக் கம்பியால் தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கள்ளச்சாராயம் பற்றி துப்பு கொடுத்த டெல்லி பெண்...நிர்வாணப்படுத்தி தாக்கிய ரவுடிப் பொம்பளைங்க!-வீடியோ

    டெல்லி : குடியிருப்புப் பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்படுவது குறித்து தகவல் கொடுத்தற்காக துப்பு கொடுத்த பெண்ணை நிர்வாணப்படுத்தி, இரும்புக் கம்பியால் தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    டெல்லியின் நரேலா பகுதியில் குடியிருப்புப் பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்படுவது குறித்து அந்தப் பகுதியில் குடியிருக்கும் 33 வயது பெண் பிரவீன் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். கடந்த புதன்கிழமை இரவு டெல்லி பெண்கள் கமிஷனிடம் இது குறித்து பிரவீன் புகார் அளித்துள்ளார்.

    இதன்படி டெல்லி பெண்கள் கமிஷனின் தவைர் ஸ்வாதி மலிவால் தலைமையிலான குழுவினர் இரவு திடீர் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது பிரைவீன் சொன்ன தகவலின் அடிப்படையில் ஒரு வீட்டை சோதனையிட்ட போது அங்கிருந்து 350 சாராய பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    துப்பு கொடுத்தவர் மீது தாக்குதல்

    துப்பு கொடுத்தவர் மீது தாக்குதல்

    இந்த கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக ஆஷா மற்றும் ராகேஷ் தம்பதி மீது வழக்கும் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பிரவீன் தனது வீட்டில் இருந்து காலை 11 மணியளவில் வெளியே வந்த போது அவரை ஆஷா மற்றும் சில பெண்கள் சூழ்ந்த கொண்டு வசைபாடி தீர்த்துள்ளனர்.

    எச்சரிக்கை

    எச்சரிக்கை

    அதோடு நின்றுவிடாமல் இவரை இரும்புக் கம்பியால் தாக்கியதோடு, ஆடைகளை கிழித்து நிர்வாணப்படுத்தியும் உள்ளனர். இந்த காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து இனி யாராவது தங்களுக்கு எதிராக புகார் அளித்தால் அவர்களுக்கும் இதே நிலை தான் என்றும் அந்த சமூக விரோத கும்பல் அந்தப் பகுதி குடியிருப்பு வாசிகளை மிரட்டியுள்ளனர்.

    தட்டிக் கேட்டதால் தண்டனை

    தட்டிக் கேட்டதால் தண்டனை

    தாக்குதலுக்கு ஆளான பிரவீன் எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் சம்பவம் குறித்து கூறியுள்ள அவர், எங்கள் காலணியில் கள்ளச்சாராயம் திறந்தவெளியில் விற்கப்படுகிறது. இதை யாருமே தட்டிக் கேட்கவில்லை, அது குறித்து நான் புகார் அளித்ததால் அந்த சமூக விரோத கும்பல் என்னை தண்டித்துள்ளது என்றும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

    அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்

    அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்

    பிரவீன் தாக்குதல் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தலைநகரில் இது போன்ற சம்பவம் நடப்பது அதிர்ச்சியாகவும் வெட்கக்கேடாகவும் இருப்பதாக கூறியுள்ளார். துணை நிலை ஆளுநர் இந்த விவகாரத்தில் தலையிட்டு உள்ளூர் காவல்துறை மீது நடவடிக்கை எடுப்பதோடு, மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+