தாயின் கள்ளக் காதலனை அடித்துக் கொன்ற டெல்லி வாலிபர் - 10 ஆண்டு சிறை
டெல்லி: தாயின் கள்ளக்காதலனை அடித்துக் கொலை செய்த வழக்கில் டெல்லி வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு டெல்லிக்கு உட்பட்ட பட்லி கால்வாய் பகுதியில் கோணிப்பையில் கட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப் பட்ட ஆணின் பெயர் குமார் எனத் தெரியவந்தது. மேலும், குமாரின் மனைவி தனது கணவருக்கு அதே பகுதியில் பெண் ஒருவருடன் கள்ளத் தொடர்பு இருந்ததாக போலீசில் தெரிவித்தார்.
அதனடிப்படையில் மேற்கொண்டு விசாரித்த போலீசார் நவீன் என்ற 23 வயது வாலிபரைக் கைது செய்தனர். தனது தாயுடன் தனிமையில் இருந்ததால் ஆத்திரத்தில் குமாரை அடித்துக் கொன்றதாக நவீன் ஒப்புக் கொண்டார்.
மேலும், தனது தாயின் உதவியுடன் குமாரின் உடலை கோணிப்பையில் திணித்து கால்வாயில் வீசியதாகவும் நவீன் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து நவீனின் தாயாரும் கைது செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் குற்றவாளி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இது திட்டமிட்ட கொலை அல்ல. தனது தாயுடன் இன்னொரு ஆடவரை பார்க்கக் கூடாத நிலையில் பார்த்த ஆத்திரத்தின் விளைவாக உணர்ச்சிவசப்பட்டு அந்த வாலிபர் இந்த தவறை செய்து விட்டார்' என வாதாடினார்.
இதனையடுத்து, குற்றவாளி நவீனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், இந்த கொலையை மறைக்க அவருக்கு உடந்தையாக இருந்த தாயாருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் வழங்கி டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications