For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்த கொடுமையை எங்க போய் சொல்ல... பணத் தட்டுப்பட்டால் ரத்தாகும் திருமணங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

பணத்தட்டுப்பாட்டால் ரத்தாகும் திருமணங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.

By Mathi
Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பணத்தட்டுப்பாட்டால் கடந்த 2 நாட்களில் 20க்கும் மேற்பட்ட திருமணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது முதலே கடந்த 2 வாரங்களாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக முடங்கிப் போய்விட்டது. அன்றாட தேவைகளுக்கு கூட ஏடிஎம்களில் பணம் கிடைக்காமல் பெரும் போராட்டத்தை எதிர்கொண்டிருக்கின்றனர் பொதுமக்கள்.

Demonetisation force to cancel marriages

ஆன்லைன்வாசிகள்தான் ஒன்னும் பிரச்சனை இல்லையே.. என அங்கலாய்த்து கொண்டிருக்கிறார்கள்... ஆனால் அன்றாடங்காய்ச்சிகள் நிலை அதளபாதாளத்துக்குப் போய் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களில் மட்டும் பல திருமணங்கள் பணத்தட்டுப்பாடு காரணத்தால் மட்டுமே நின்று போயிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. 500, 1000 ரூபாய் பணத்தை மாற்ற முடியாத காரணத்தால் வேறுவழியே இல்லாமல் திருமணங்களை வேறு ஒரு தேதியில் நடத்த முடிவு செய்து ரத்து செய்திருக்கிறார்களாம்..

பணத்தட்டுப்பாடு விவகாரம் சமூகத்தின் அனைத்து அன்றாட நிகழ்வுகளையும் மிக மோசமாக பாதித்து வருவது பொதுமக்களை பெரும் பீதிக்குள்ளாக்கியுள்ளது.

English summary
PM Modi's Demonetisation plan forced to cancelled the marriage functions in Karnataka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X