ரூ 17 லட்சம் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்.. ஹைதராபாத்தில் சிபிஐ அதிரடி ரெய்டு
ஹைதராபத்தில் 11 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ 17 லட்சம் மதிப்புள்ள புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையாக நவம்பர் 8 ஆம் தேதி முதல் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. அதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்திய மத்திய அரசு, பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தது.

இதையடுத்து நாடு முழுவதும் உள்ள வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் மக்கள் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றினர். இதனிடையே பணப் பதுக்கல் தொடர்பாக நாடு முழுவதும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நேற்று 11 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 17 லட்சம் மதிப்புள்ள புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் மற்றும் பல்வேறு முக்கிய ஆவணங்கள், லேப்டாப்கள், செல்போன்கள், கைப்பற்றப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications