பண மதிப்பிழப்பு நடவடிக்கை தைரியமான முடிவு: அருண் ஜேட்லி புகழாரம்!!!
மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தைரியமானது என நிதியமைச்சர் அருண் ஜேட்லி புகழாரம் சூட்டியுள்ளார். நாட்டின் வளர்ச்சிக்கு பணமதிப்பிழப்பு நடவடிக்கை வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.
டெல்லி: மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தைரியமானது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு படிப்படியாக பலன் கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மபொது பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தைரியமானது என புகழாரம் சூட்டினார்.

மேலும் அவர் பேசியதாவது, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு பணமதிப்பு ரத்து நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த நடவடிக்கை நாட்டின் வளர்ச்சிக்கு நீண்ட வழிவகுக்கும்.
கறுப்பு பணம், தீவிரவாதத்துக்கான நிதியுதவி, கள்ளப்பணம் போன்றவற்றிற்கு எதிரான பணமதிப்பிழப்பு நடவடிக்கை தைரியாமான முடிவு. இதன் மூலம் நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், நாட்டை தூய்மையாக்கவும் வழிவகுக்க முடியும்.
பணமதிப்பு ரத்து நடவடிக்கையால் நாட்டின் வளர்ச்சிக்கான நீண்டகால நன்மைகளை நிச்சயம் அறுவடை செய்ய முடியும். இதனால் நிச்சயம் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கவும் வரி வருவாயை அதிகரிக்கவும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை வழிவகுக்கும்.
இந்த வளங்களை ஏழை மக்களின் நலனுக்காக நாம் பயன்படுத்த முடியும். பணமதிப்பு ரத்து நடவடிக்கையின் விளைவாக வங்கிகள் தங்களின் வட்டி விகிதத்தை குறைக்க முடிந்தது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை பலன் படிப்படியாக கிடைக்கும் இவ்வாறு மத்திய அமைச்ச்ர அருண்ஜேட்லி நாடாளுமன்றத்தில் பேசினார்.












Click it and Unblock the Notifications