டெல்லியில் கடும் பனிமூட்டம்.. டிரக் மீது பஸ் மோதல்.. விமான போக்குவரத்து பாதிப்பு
டெல்லியில் கடும் பனி ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: முன்னே செல்லும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடும் பனிப் பொழிவு காணப்படுவதால் டெல்லியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் தீபாவளி நேரத்தில் அதிக அளவில் பட்டாசுகளை வெடித்ததால் கடுமையான புகைப்பனி மூட்டம் ஏற்பட்டது. மாணவர்கள், வேலைக்கு செல்வோரும் கடும் பாதிப்பிற்கு ஆளானார்கள். '
இந்நிலையில், தற்போது குளிர்காலம் என்பதால் டெல்லியில் பனிமூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. இதேபோன்று அருகில் உள்ள மாநிலமான உத்தர பிரதேச மாநிலத்திலும் கடும் பனி மூட்டம் ஏற்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் அவதி
டெல்லியில் இன்று அதிகாலையில் அடர்ந்த பனிமூட்டம் ஏற்பட்டது. இதனால் மனிதர்கள் ஒருவருக்கொருவரை பார்க்க முடியவில்லை. இதனால் வாகனங்களில் செல்வோர் யார் மீதாவது மோதி விடுவோமோ என்ற அச்சத்தோடு வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர்.

விமான போக்குவரத்து பாதிப்பு
டெல்லியில் ஏற்பட்டுள்ள அடர்த்தியான பனிமூட்டம் காரணமாக டெல்லி மற்றும் லக்னோ விமான நிலையங்களில் விமானம் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல விமானங்கள் தாமதமாக வந்து செல்கின்றன.

ரயில் சேவை பாதிப்பு
உத்திர பிரதேச மாநிலத்திலும் கடும்பனி மூட்டம் நிலவி வருவதால், ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வாகனங்களில் செல்பவர்கள் முகப்பு விளக்கை எரிய செய்து எச்சரிக்கையாக பயணம் செய்கின்றனர்.

டிரக்-பஸ் மோதல்
உத்தரப் பிரதேசம் மாநிலம் மாவ் மாவட்டத்தில் அடர்த்தியான பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் எதிர் வரும் வாகனங்கள் தெரியாமல் சாலை விபத்து நடைபெற்றது. இன்று காலையில் ஒரு டிரக் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications