ஜன்தன் யோஜனா வங்கி கணக்குகளில் ரூ.64,250 கோடி டெபாசிட்!
நவம்பர் 8ம் தேதிக்கு பின் ஜன்தன் யோஜனா வங்கி கணக்குகளில் அதிகளவு டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி: ஜன்தன் யோஜனா வங்கி கணக்குகளில் நாடு முழுவதும் இதுவரை ரூ.64,250 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8ம் தேதி அறிவித்தார். இதற்கு பதிலாக புதியதாக 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. இதனால் பொதுமக்கள் பழைய நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்ற கடும் சிரமப்பட்டு வருகிறார்கள். மேலும் சில்லரை தட்டுப்பாடும் நிலவி வருகிறது.

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் தங்களிடம் உள்ள பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து வருகின்றனர். இதன் மூலம் நாள் தோறும் பொதுமக்களின் வங்கி கணக்குகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்படுகிறது. அதுபோல பிரதமரின் ஜன் தன் திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கும் வங்கி கணக்கு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில், மொத்தம் 25.58 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன. ஆனால், 5.98 கோடி வங்கிக் கணக்குகள் எவ்வித சேமிப்புத் தொகையும் இன்றி, வெறுமனே பராமரிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், தற்போதைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், அனைத்து ஜன் தன் வங்கிக் கணக்குகளிலும் பணம் டெபாசிட் செய்வது அதிகரித்துள்ளது. இதுவரை மொத்தம் ரூ.64,252 கோடி ஜன் தன் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
இதில், அதிகபட்சமாக, உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும் ரூ.10,670 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக மேற்கு வங்கம் மாநிலத்தில்ரூ.7,826.44 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. அங்கு ரூ 5,345.57 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேசமயம், ஜன் தன் வங்கிக் கணக்குகளை பயன்படுத்தி, கருப்புப் பணத்தை டெபாசிட் செய்பவர்களையும் கண்காணித்து வருவதாகவும், அவர்கள் மீது உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிதியமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
-
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications